கலாஷேத்ரா பிரச்சினை சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

கலாஷேத்ரா பிரச்சினை சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை, ஏப். 18- சென்னை கலா ஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற உதவி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண் ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக்கூடாது என்றும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில், குழுவை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரி கல்லூரி மாணவிகள் 7 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று (17.4.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வைகை ஆஜராகி, இந்த உள் விசாரணைக்குழு கண்து டைப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவை மாற்றியமைக்க வேண்டும் என வாதிட் டார்.

கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, அங்கு நடைபெற்ற பாலியல் குற்றச் சாட்டுகள் தொடர்பாக சட்டப் படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புகா ரளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாது என உத்தரவாதம் அளித் தார்.தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மாநில மகளிர் ஆணையம் நடத் திய விசாரணை அறிக்கை அரசி டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி, கலாஷேத்ரா நிர்வாகத்தின் நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடைய வில்லை என்றால், அந்த நிறுவ னத்தின் பெயரைக் காப்பாற்றும் வகையில் சிறப்பு விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றமே அமைக் கும். வழக்கு தொடர்ந்துள்ள மற் றும் புகார் அளித்துள்ள மாணவி களின் அடையாளத்தை வெளிப் படுத்தக்கூடாது. 

பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகளாக உள்ள மாணவி களுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கக்கூடாது. குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள் மாண விகளுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. மாநில மகளிர் ஆணை யத்தின் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விட்டார். 

மேலும், இந்த வழக்கில் கலா ஷேத்ரா அறக்கட்டளை நிர்வா கம், மத்திய அரசு பதிலளிக்க உத் தரவிட்ட நீதிபதி, விசார ணையை ஏப்.24ஆம் தேதிக்கு தள்ளிவைத் தார்.

No comments:

Post a Comment