தேர்தல் பயமோ?-கருநாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நெருக்கடி - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

தேர்தல் பயமோ?-கருநாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நெருக்கடி - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

 பெங்களுரு, ஏப் 24- காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நெருக் கடி கொடுக்கப்பட்டதாக காங் கிரஸ் தலைவர் டி.கே.சிவக் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் வருகிற 10ஆம் தேதி எதிர்கொள்ளும் கருநாடகத் தில் அரசியல் களம் நாள் தோறும் பரபரப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 13ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதில், கருநாடக காங்கிரஸ் கட்சி தலைவரும், கனகபுரா தொகுதி வேட்பாளருமான டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து விவரமும், வருமானவரி கணக் கில் தாக்கல் செய்த சொத்து விவரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் பா.ஜனதா வினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகளும், வரு மானவரித் துறையினரும் சொத்து விவரத்தின் 2 பட்டி யல்களையும் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் டி.கே.சிவக் குமாரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளர்களுக்கு தேர்தலில் சீட் வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றிருப்பதாக ஒன்றிய அமைச்சர் சோபா குற்றச் சாட்டு கூறி இருக்கிறார். ரூ.2 லட்சம் பெற்றதற்காக காங்கி ரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நான் 40 சதவீத கமிஷன் பெறவில்லை. பா.ஜனதா கட்சி 40 சதவீதம் கமி ஷன் பெற்றதற்கு, விருபா க்ஷப்பா எம்.எல். ஏ.வே சாட்சி. பா.ஜனதா கட்சியை சேர்ந்த யத்னால், நேரு ஒலேகார், எச். விஸ்வநாத் உள்ளிட்ட தலை வர்களே அக்கட்சியினரும், தலைவர்களும் கமிஷன் பெறு வதாக கூறி இருக்கின்றனர். வேட்பு மனுவுக்காக ரூ.5 ஆயி ரமும், கட்சியின் புதிய கட்ட டத்திற்காக ரூ.2 லட்சமும் வாங்கியது உண்மை தான். பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் களிடம் பணம் கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கவில்லையே. சட்டசபை தேர்தல் பிரசாரத் தில் 40 சதவீத கமிஷன் விவ காரம், காவல் உதவி ஆய்வாளர்  தேர்வு முறைகேடு உள்ளிட்ட பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களை முன்வைத்தே காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்.

பா.ஜனதாவின் அணைக் கட்டு உடைந்து வெளியேறும் தண்ணீர் காங்கிரஸ் கட்சியின் கடலில் வந்து சேருவதாக கூறினேன். இதற்கு மற்றொரு சாட்சி தான் சித்தாபுரா தொகுதியில் 3 முறை பா.ஜனதா சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வ நாத் பட்டீல், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். இதுபோல், நிறைய பா.ஜனதா தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேருவார்கள். பூத் மட்டத்தில் இருந்தும், பிற கட்சிகளில் இருந்தும் வருப வர்களை காங்கிரசில் சேர்த்து கொள்ள, கட்சியின் பிரமுகர் களுக்கு அனுமதி வழங்கி உள் ளேன். மாநிலத்தில் மாற்றத்திற் கான காலம் தொடங்கி விட் டது. அதனால் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி காங்கிரசுடன் அனைத்து தலைவர்களும் கைகோர்த்து வருகின்றனர். என்னுடைய வேட்பு மனுவை தள்ளுபடி செய்வதற்கான முயற்சியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டனர். எனது வேட்பு மனு ஏற்கப் பட்டுள்ளது. இதுபோல், மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தி உள் ளனர். முதலமைச்சர் அலுவல கத்தில் இருந்தே தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன. முதலமைச்சர் அலுவலகத்தை அதிகார அத்துமீறல் செய் கிறார்கள். எனவே முதமைச் சர் அலுவலகத்தில் இருந்து சென்ற தொலைபேசி அழைப் புகள் சம்பந்தப்பட்ட பட்டி யலை பெற்று தேர்தல் ஆணை யம் ஆய்வு செய்ய வேண்டும்.

பெலகாவி மாவட்டம் சவ தத்தி எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவில் சில தவறுகள் இருந்துள்ளது. அந்த தவறு களை திருத்துவதற்காக முதல மைச்சர் அலுவலகத்திலிருந்து தேர்தல் அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன. இந்த விவ காரத்தில் தேர்தல் ஆணையம் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும். பா.ஜனதா வேட்பாளர்களின் வேட்பு மனுவில் தவறு இருந்தால், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும். வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்ட எனது பிரமாண பத்திரத்தை ஆயி ரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்

No comments:

Post a Comment