புழல் சிறையில் புத்தகக் கண்காட்சி கவிஞர் வைரமுத்து கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

புழல் சிறையில் புத்தகக் கண்காட்சி கவிஞர் வைரமுத்து கருத்துரை

சென்னை, ஏப். 24- சென்னையை அடுத்த புழல் சிறையில் நேற்று (23.4.2023) புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. 

புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த புத்தகக் கண்காட்சியை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, "நேரு, காந்தி, மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தவர்கள். நீங்கள் தலைவர் களாகி வெளியே செல்ல வேண்டும்" என கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் சிறைத்துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சிறைத்துறை காவல் துணைத் தலை வர்கள் கனகராஜ், முருகேசன், கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment