அமர்த்தியா சென்னுக்கு பல்கலைக்கழகம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

அமர்த்தியா சென்னுக்கு பல்கலைக்கழகம் தாக்கீது

 பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்னுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா? நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு:

கொல்கத்தா, ஏப். 18- நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்னுக்கு மத்திய பல் கலைக்கழகம் தாக்கீது அனுப்பி உள்ளது.  நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல் கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார்.

இந்நிலையில், 89 வயதான அவ ருக்கு விஸ்வபாரதி பல்கலைக் கழகம், வெளியேற்ற தாக்கீது அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் அமர்த்யா சென்னுக்கு சட்டப்படி பாத்தியப்பட்ட 1.25 ஏக்கருக்கு பதிலாக, அவர் 1.38 ஏக்கர் நிலத்தை தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறார். 

இதன்மூலம் .13 சென்ட் நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்தை விட்டு அவர் வெளியேற வேண்டும். இவ்விவகாரத்தில் 19ஆம் தேதி பகல் 12 மணிக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். 

அப்போது, அமர்த்யா சென்னோ அல்லது அவருடைய வழக்குரைஞர்களோ ஆஜராக வேண்டும். எழுத்துப்பூர்வமான பதிலை, 18ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம். சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்கீது, அமர்த்யா சென் வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தாக்கீதுக்கு இன் னும் பதில் அளிக்கவில்லை. இந்நி லையில், விஸ்வபாரதி பல்கலைக் கழக செய்தித் தொடர்பாளர் மஹுவா கூறும்போது,

''அமர்த்யா சென், இன்னும் தாக்கீதுக்கு பதில் அளிக்க வில்லை. இன்னும் சில நாட்கள் காத்திருப்போம். 19ஆம் தேதிக்குள் பதில் அளிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். 19ஆம் தேதி, இறுதி தீர்ப்பு மூலம் இப்பிரச்சினை முடித்து வைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

 அமர்தியா சென்  பொருளாதார மேதை நோபல் பரிசு பெற்றவர், இவர் மோடியின் பண மதிப்பிழப்பு குறித்தும், 100 நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை குறைத்தது குறித்தும், பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் கடுமை யான சரிந்த போது இந்தியாவில் எரிபொருள் விலை கடுமையாக விலையேற்றம் உள்ளது குறித்தும் தொடர்ந்து விமர்சித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment