மும்பை அய்.அய்.டி. தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்சன் சோலங்கி ஜாதி ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை - சக மாணவர் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

மும்பை அய்.அய்.டி. தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்சன் சோலங்கி ஜாதி ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை - சக மாணவர் கைது!

மும்பை, ஏப்.13 மும்பை அய்அய்டி-யில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்ஷன் சோலங்கி மரண வழக்கில் 2 மாதத்திற்குப் பின், சக  மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். 

குஜராத் மாநிலம் அகமதா பாத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). மகாராட்டிர மாநிலம், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Technology - IIT) பி.டெக். முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர், கடந்த பிப்ரவரி 12 அன்று கல்லூரி விடுதியின் 7-ஆவது மாடியிலிருந்து குதித்து தற் கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அய்அய்டி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக் குறிப்பு எதுவும் உடனடியாக கிடைக்காத நிலையில், தர்சனின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப் படுத்த முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித் தனர். ஆனால், கல்வி வளாகத்தில் ஜாதிய ரீதியாக காட்டப்பட்ட பாரபட்சம், அவமானம் ஆகிய வையே மாணவர் சோலங்கி யின் தற்கொலைக்கு காரணம் என்று மாணவர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கல்லூரி வளாகத்தில் ஜாதி  ரீதியிலான பாகுபாடு நடைபெற வில்லை என மும்பை அய்அய்டி சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவித்தது. மதிப்பெண் குறைவு காரணமாக தர்சன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அக்குழு தெரிவித்தது.

உயிரிழப்பில் சந்தேகம் இருப் பதாக தர்ஷனின் பெற்றோர் தெரிவித்தனர். குறிப்பாக தர்ஷன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கல்லூரி யில் சக மாணவர்கள் அவரிடம் பாகுபாடு காட்டியதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த மும்பை காவல்துறையினர், கடந்த பிப்ரவரி 28 அன்று சிறப்பு விசாரணைக் குழுவை (ஷிமிஜி) அமைத்தனர். இக்குழு, தர்ஷன் குடும்பத்தினர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் உட்பட 35 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்தது. இதனிடையே, கடந்த மார்ச் 3 அன்று தர்சன் தங்கியிருந்த அறையிலிருந்து கையால் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றினர். அதில், “அர்மான் என்னை கொன்று விட்டார்” என குறிப் பிடப்பட்டிருந்தது. காவல்துறையினர் இதனைத் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத் தனர்.

இந்நிலையில், தடயவியல் துறை அதிகாரிகள் (கையெ ழுத்து நிபுணர்கள்)  எஸ்அய்டி அதிகாரி களிடம் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், விடுதி அறையில் எடுக்கப் பட்ட குறிப்பில் இடம் பெற்றி ருந்த கையெழுத்தும், உயிரிழந்த தர்சனின் கையெழுத் தும் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தர்சனுடன் ஒரே அறையில் தங்கி படித்து வந்த  அர்மான் இக்பால் காத்ரியை கைது  செய்துள்ளதாக மும்பை காவல் துறையின் சிறப்பு விசா ரணைக்குழு தெரிவித்துள்ளது. அர்மான் மீது இந்திய தண் டனைச் சட்டத்தின் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டு தல்) மற்றும் எஸ்.சி., எஸ்.டி.  வன் கொடுமை தடுப்பு சட்டப்பிரி வின் கீழ் வழக்கும் பதிவு செய்யப் பட்டு உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து அர்மான் கூறிய கருத்து  தொடர்பாக அவருக்கும் தர்ஷனுக்கும் வாக்குவாதம் ஏற் பட்டதாக முதற்கட்ட விசார ணையில் தெரிய வந்துள்ளது. 

 இந்நிலையில், “எனது மகன்  மும்பை அய்அய்டி-யில் ஜாதி ரீதி யிலான பாகுபாட்டை எதிர் கொண்டுள்ளான். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். எனது மகன் மீது ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டிய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தர்சனின் தந்தை ரமேஷ் பாய் சோலங்கி வலியுறுத்தி யுள்ளார்.


No comments:

Post a Comment