இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்வீர்! சட்டப்பேரவையில் டாக்டர் நா. எழிலன் வலியுறுத்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்வீர்! சட்டப்பேரவையில் டாக்டர் நா. எழிலன் வலியுறுத்தல்!

சென்னை, ஏப்.9- சட்டப் பேரவையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் எழுப்பிய கேள்வியும், அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அளித்த பதிலும் வரு மாறு:-

டாக்டர் நா. எழிலன்: 

இதர பிற்படுத்தப்பட் டோர் 27 சதவிகித இடஒ துக்கீடு ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் கேள்வி யைக் கேட்கிறேன். ஒன் றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வகைப்பாடுகளில், ஜாதிச் சான்றிதழ்களில் தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அர சின் உத்தரவுகளில் 4 (2) (3) பிரிவில் பொதுவாக பொதுத்துறை ஊழியர் கள் என்று குறிப்பிட்டி ருப்பதால், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் இடைநிலை, கடைநிலை ஊழியர்க ளுக்கு உரித்தான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் சிக்கல் உள்ளது.

பொதுத் துறை ஊழி யர்கள் என்ற இப்பிரிவினை வகைப்படுத்தி, கடைநிலை ஊழியர் கள், இடைநிலை ஊழியர்கள் என்று பிரித்தால்தான், 27 சதவிகிதம் இட ஒதுக் கீடு அவர்களுக்கு கொண்டுபோய் சேருவதற்கான வழி முறைகள் சாத்தியக்கூறு ஆகும்.

இதனால் இந்தத் திருத்தத்தைத் திருத்தி வருவாய்த் துறையில் இதர பிற்படுத்தப்பட் டோர் பொதுத் துறை நிறுவனங்களில் இடை நிலை ஊழியர்கள், கடை நிலை ஊழியர்கள் என்று பிரித்தால் அவர்களு டைய குழந்தைகள் ஒன் றிய அரசின் வேலை வாய்ப்பிலும், கல்வி நிறு வனங்களிலும் சேர இதர பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இட ஒதுக்கீடு சான்றிதழ் கிடைக்க வழி செய்யுமாறு அமைச்சர் அவர்களிடம் கேட்டு அமர்கிறேன்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்:

உறுப்பினர் அவர்கள் இது சம்பந்தமாக ஏற் கெனவே என்னிடம் பேசியிருக்கிறார்கள். அது சம்பந்தமாக என்னு டைய துறை அதிகாரிகள் மத்தியிலும் நான் கலந்து பேசியிருக்கிறேன். 

என்னுடைய துறை சார்ந்த மானியக் கோரிக்கை முடிந்த பிறகு, உறுப்பினர் அவர் களை அழைத்து பேசி, அதற்கு வேண்டிய முடி வெடுத்து, முதலமைச்சர் அவர்களின் கவனத் திற்குக் கொண்டு செல் லலாம்.

-இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment