தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சை, ஏப்.9 நேற்று  (8.4.2023)  மாலை 5 மணியளவில் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு  தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தலைமையில்  தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்புப் பாராட்டும் - ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம், ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதனை மாநில அரசின் ஒத்திசைவோடு  அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி  வேண்டுகோள் ஆர்ப்பாட்டமாகவும் நடைபெற்றது. 

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.அமர் சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில தொழிலா ளரணி செயலாளர் மு.சேகர், தஞ்சை மண்டல தலை வர் மு. அய்யனார், கழக காப்பாளர் வெ.ஜெயராமன், தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, திருவாரூர் மண்டல தலைவர் கி.முருகையன், திருவாரூர் மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம் கழக மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மு.அறிவொளி, அரியலூர் மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டல செயலாளர் க.மணிவண்ணன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், திருவாரூர் மாவட்ட தலைவர் வி.மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ. நெப்போலியன், அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன்,  புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், திருவாருர் மாவட்ட செய லாளர் வீர.கோவிந்தராசு, நாகை மாவட்ட செய லாளர் ஜெ.பூபேஸ்குப்தா, திருச்சி மாவட்ட செயலா ளர் இரா.மோகன்தாஸ் பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், குடந்தை மாவட்ட செய லாளர் சு.துரைராசு, ஆகி யோர் முன்னிலையேற்று சிறப்பித்தனர்

இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட தலை வர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் வீர மோகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுலாவுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மதிமுக மாவட்டச் செயலாளர் முனைவர் வி.தமிழ்ச்செல்வம். காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந் திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் - மாநில மருத்துவர் அணி தி.மு.க. துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, காங்கிரஸ் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பி னர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப் பினர் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன குரல் எழுப்பினர். 

தமிழர் தலைவர் உரை

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இவ்வார்பாட்டத்திற்குத் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். டெல்டா மாவட் டங்களில் நிலக்கரி எடுக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்திய தமிழ்நாடு அரசினை பாராட்டியும், இனி ஒன்றிய அரசு எந்தத் திட்டம் அறிவிப்பதாக இருந்தாலும் அதனை மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து செயல்படுத்தவேண்டும் என்பதை ஒன்றிய அரசுக்கு எடுத்துக் கூறியும் சிறப் புரையாற்றினார்.

பங்கேற்றோர்

மாநில வழக்குரைஞர் அணி தலைவர் த.வீரசேகரன், ப.க. மாநில ஊடகப் பிரிவு தலைவர் அழகிரிசாமி, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு பழனிவேல், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் வடசேரி ஞானசிகாமணி, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி பொருளாளர் போட்டோ மூர்த்தி, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் இரா.சரவணாகுமார், மாநகர துணை செயலாளர் இரா.வீரக்குமார், மண்டல மகளிர் அணி செயலாளர் அ.கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு,  தஞ்சை மாநகர அமைப்பாளர் செ.தமிழ்ச் செல்வம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு ராமலிங்கம், தெற்கு ஒன்றிய தலைவர் சேகர், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் சுதாகர், செயலாளர் அரங்கராஜ், பூதலூர் ஒன்றியத் தலைவர் அள்ளூர் இரா.பாலு, செயலாளர் ரெ.புகழேந்தி, திருவை யாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், செயலாளர் துரை ஸ்டாலின், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் காத்தையன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், செயலாளர் மாநல்.பரமசிவம், கண்டியூர் நகர செயலாளர் மதுரகவி, பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு ராசப்பன், பொதுக்குழு உறுப்பினர் வல்லம் கு. மணியன், தஞ்சை மாநகர துணைத் தலைவர் பழக்கடை கணேசன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் சாமி தமிழ்ச்செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணை தலைவர் லட்சுமணன், துணை செயலாளர் பெரியார் கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரே.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுப்பிரமணியன்,  ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர்  சு.குமரவேலு, மாவட்ட மாணவர் கழக செயலாளர் சிந்தனை, துணை செயலாளர் விடுதலை அரசி, சட்டக் கல்லூரி மாணவர் ம.ஓவியா, நிலவன், மகளிரணி தோழியர் ச.அஞ்சுகம், ஏ.பாக்கியம், இ.அல்லிராணி, குடந்தை திரிபுரசுந்தரி, கழகத் தோழர்கள் ஓவியர் புக ழேந்தி, ஆட்டோ செந்தில்,  தெற்கு நத்தம் அன்பழகன், விசிறி சாமியார் முருகன், சுரேந்தர், சவுந்தர்ராஜன், அ.ராசப்பன், பாலகிருஷ்ணன் 

கும்பகோணம் மாவட்டம்

மாநில ப.க.பொதுச்செயலாளர் மோகன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக க.திருஞானம், மாவட்ட இளைஞரணி செயலாளர் து.சரவணன், குடந்தை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ், மாவட்ட துணை செயலாளர் வை.கோவிந்தன், சோழ புரம் மதியழகன், ஆ.தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார், மாணவர் கழகத் தோழர் அருண்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சங்கர், ராணி குருசாமி, மாவட்ட ப.க. தலைவர் சேது ராமன், நற்சோணை சக்கரவர்த்தி, பவானி சங்கர், குடந்தை நகர தலைவர் இரமேஷ், வியக்குமார்.

பட்டுக்கோட்டை மாவட்டம்

பொதுக்குமு உறுப்பினர்கள் அரு.நல்லத்தம்பி, இரா.நீலகண்டன், மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், பட்டுக்கோட்டை நகர தலைவர் சிற்பி வை.சேகர், சேது பாவா சத்திரம் ஒன்றிய தலைவர்  சி.செகநாதன், பட்டுக் கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரெங்கசாமி, அம்மையாண்டி கருப்பையன், 

மன்னார்குடி கழக மாவட்ட மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல், மு. இராமதாசு, கோவி.அழகிரி, வீ.புட்பநாதன், இராயபுரம் சக்திவேல், கோவிந்தராசு, மன்னை மணிகண்டன், வடுவூர் லோகநாதன், பகுத் தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் தங்க.வீரமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ்கண்ணன், அமைப்பாளர் சுருளிராஜன், புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்ட மாணவர் கழக இரா.யோகராசு. 

அரியலூர் மாவட்டம் 

மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் மா.சங்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ.இளவழகன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன், செயலாளர் வெ.இளவரசன், அமைப்பாளர் மா.கருப்புசாமி, செந் துறை ஒன்றியத் தலைவர் மு.முத்தமிழ்செல்வன், ஒன் றிய துணை செயலாளர் சுப்புராயன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், திருமானூர் ஒன்றிய தலைவர் க.சிற்றரசு, அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபால், மேனாள் மாவட்ட துணை செயலாளர் சோ.க.சேகர், மாவனூர் மதியழகன், விளாங்குடி கி.கமலக் கண்ணன், முகேஷ்ராஜ், பூ.கலைமணி.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் 

எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, நகர அமைப்பாளர் கா.சிவராமன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன், நகர செயலாளர் ப.நாகராஜன், நகர அமைப்பாளர் சம்பத்குமார், வடுவக்குடி பழனிச்சாமி.

நாகை மாவட்டம்

நாகை மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், திருமருகல் ஒன்றியத் தலைவர் கு.சின்னதுரை, மண்டல இளை ஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவரணி அமைப்பாளர்  மு.இளமாறன்,  மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வி.ஆர்.அறிவுமணி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.பாக்கியராஜ், இளைஞரணி தோழர் ஹரிகரன், மாணவர் கழகத் தோழர் கஜேந்திரன்.

திருச்சி மாவட்டம்

திருவரங்கம் இரா.முருகன், காட்டூர் தோழர்கள் சங்கிலிமுத்து, கனகராஜ், இராமச்சந்திரன், இராஜேந்திரன், பாச்சூர் அசோகன், விடுதலை கிருஷ்ணன், ராஜசேகர், மகாமணி, முபாரக், கங்காதரன், பாலசுப்ரமணி, காமராஜ், ஜெயில்பேட்டை குணா,  திமுக மாவட்ட துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் கல்லனை செல்லக்கண்ணு, முருகானந்தம், செந்தில் குமார், முரசொலி, ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லா.இரமேஷ், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செய லாளர் ஜெ.கார்த்திக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் எல்.பழனியப்பன், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கக்கரை மனோகரன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், அனைத்து கட்சி தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்!

1. நிலக்கரி சுரங்கமா? நிலக்கரி சுரங்கமா?

டெல்டா மாவட்டங்களில்நிலக்கரி சுரங்கமா?

2. வெற்றி! வெற்றி!

ஒன்றிய அரசின் முடிவுக்கு

எதிரான போராட்டத்திற்கு வெற்றி!

3. வெற்றி! வெற்றி!

மாநில உரிமைப் போராட்டத்திற்கு, வெற்றி!

4. பாராட்டு, பாராட்டு!

ஒன்றிய அரசோடு போராடி

வெற்றி பெற்றுத் தந்த

முதலமைச்சருக்கு பாராட்டு!

5. காப்பாற்று! காப்பாற்று!!

ஒன்றிய அரசே, மோடி அரசே, காப்பாற்று!

6. காப்பாற்று, காப்பாற்று!

கொடுத்த உறுதிகளை - காப்பாற்று!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு

நிலம் வழங்கிய மக்களுக்கு

கொடுத்த உறுதிகளைக் காப்பாற்று! காப்பாற்று!!

7. தலையிடாதே, தலையிடாதே!!

ஒன்றிய அரசே, மோடி அரசே

மாநில உரிமையில், தலையிடாதே!

8. உரிமையுண்டு, உரிமையுண்டு!

ஒத்திசைவுப் பட்டியலில்- மாநிலத்திற்கு

உரிமையுண்டு! உரிமையுண்டு!

9. மறுக்காதே, மறுக்காதே!

மாநில உரிமையை மறுக்காதே!

10. வெற்றி, வெற்றி!

மக்கள் கரங்கள் ஒன்றுபட்டதால்

வெற்றி, வெற்றி!

11. போராடுவோம், போராடுவோம்!

உரிமையை மீட்கப் போராடுவோம்!

போராடுவோம், போராடுவோம்!

வீதிக்கு வந்து போராடுவோம்!

12. மேலானது, மேலானது!

நீதிமன்றத்திற்கும் மேலானது

மக்கள் வீதிமன்றமே, வீதிமன்றமே!

13. போராட்டம் எங்கள் இரத்த ஓட்டம்

இலட்சியத்தை காணாமல்

ஓயமாட்டோம், ஓயமாட்டோம்!

14. போராடுவோம், போராடுவோம்!

வெற்றிக் கிட்டும் வரை

போராடுவோம், போராடுவோம்!


No comments:

Post a Comment