குறிஞ்சிப்பாடியில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

குறிஞ்சிப்பாடியில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம்

குறிஞ்சிப்பாடி, மார்ச் 12 குறிஞ்சிப்பாடி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாள் விழா அறிவார்ந்த கருத்தரங்கமாகக் குறிஞ்சிப்பாடி வி.ஆர். மகாலில் 10.3.2023 அன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கு நகர திராவிடர் கழகத் தலைவர் கனகராஜ் தலைமையில், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள், செயலாளர் குணசுந்தரி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் தமிழேந்தி, செயலாளர் சத்தியவதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பகுத்தறிவாளர்கழக மாவட்ட செய லாளர் பெரியார் செல்வம் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

சிதம்பரம் கழக மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சிதம்பரம் மாவட்ட இணைச்செயலாளர் யாழ் திலீபன், தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் அருள்சங்கு ஆகியோர் அன்னை மணியம்மையாரின் ஈகம் பற்றியும், போர்க்குணம் பற்றியும், தந்தை பெரியாரை நீண்ட நாள் வாழ வைத்த செவிலித்தாய் சிறப்பு பற்றியும் கருத்தரங்க உரையாற்றினர். 

மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், செயலாளர் வேலு, அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ராஜலிங்கம், பொன்வெளி கழகத் தலைவர் சீதாராமன், செயலாளர் இளவரசு வடக்குத்து, திராவிடன் குறிஞ்சிப்பாடி, ஞானப்பெரியார் செல்வன், ஞான அறிவு மணி, மறுவாய் கழகத் தலைவர் திரு நாவுக்கரசு, கட்டியங்குப்பம் கழகத் தலைவர் சேகர், பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல், ஆபத்தானபுரம் தலைவர் பாண்டியன், பொன் வெளி பிரதீபன், கழக மகளிரணி தோழர்கள் சுமலதா, மலர் மங்கலட்சுமி, நூலகர் கண்ணன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிவுச்செல்வன், பெரியார் பிஞ்சு அறிவு, பொன்னி ஆதவன், சேப்பலாநத்தம் வரதராஜன், கலைச்செல்வி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பு சேர்த்தனர்.

அன்னை மணியம்மையாரின் படம் திறக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. முடிவில் குறிஞ்சிப்பாடி கழக அமைப்பாளர் இரா.இந்திரஜித் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment