சுவரெழுத்து சுப்பையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

சுவரெழுத்து சுப்பையா

1960ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது...

சீர்காழி சியாமளா பெண்கள் உயர் நிலைப் பள்ளி வாசலில் ஆவேசத் துடன் திரண்டு நின்று கொண்டிருந்தனர் பெற் றோர்கள்.

பள்ளியின் சுற்றுச் சுவரில் எழுதப்பட் டிருந்த ஒரு வாசகம் அவர்களை கொந் தளிக்க வைத்திருந்தது. என்ன, பள்ளிக்கு முன்பு இவ்வளவு கூட்டம்? என்று ஆர்வத் துடன் வேடிக்கை பார்க்க வந்த பொதுமக் களும் சுவரில் எழுதியிருந்தைப் படித்து விட்டு கோபத்துடன் பெற்றோர்களுடன் இணைந்து கொள்ள...எல்லோரையும் சமா தானப்படுத்த வழிதெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை யாசிரியர்.

"பொம்பளப் புள்ளைங்க படிக்கிற இடத்தில இப்படி எழுதலாமா?"

"ஏதோ நாலெழுத்து தெரிஞ்சுக்குனும் தான் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பறோம்...இப்படி எழுதி வச்சா எப்படி அனுப்பறது?" 

"இதப் படிச்சிட்டு பொம்பளப் புள் ளைங்க இதுக்கு ஆசைப்பட்டா குடும்பம் குட்டிச்சுவராயிடாதா..?" என்கிற பொதுமக் களின் கேள்விகளைச் சமாளிக்க இயலாத தலைமையாசிரியர் அந்தச் சுவரை வெறித்துப் பார்த்தார்.

அதில்...

"சைக்கிள் ஓட்டும் பெண்கள்;

செந்தமிழ்நாட்டின் கண்கள்!"

என்று எழுதப்பட்டிருந்தது.

தலைமையாசிரியருக்கும் கூட்டத்தில் இருந்த விவரம் தெரிந்த ஒருசிலருக்கும் இதை எழுதியது யாரென்று புரிந்துவிட்டது.

பிரஷ் இல்லாமல்,பெயிண்ட் இல்லா மல் ரோடு போடப் பயன்படும் தாரை உருக்கி, விரலில் துணியைச் சுற்றிக் கொண்டு தாரில் தொட்டு முத்து முத்தாக சுவர்களில் எழுதி வைப்பவர் சுற்று வட்டா ரத்தில் ஒருவர்தான். அவர்...சுவரெழுத்து சுப்பையா!

பெண்கள் விமானம் ஓட்டுகிற காலத் தில் இந்தச் செய்தி உங்களுக்கு வேடிக்கை யாக இருக்கலாம். ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தின் நிலை இதுதான்.

அவ்வளவு ஏன்? 

தொண்ணூறுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களின் கேலி, சமூகத் தின் கிண்டல்களை எதிர்கொண்டு சைக்கிள் ஓட்டுவதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தனர் பெண்கள். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் அன் றைய ஆட்சித்தலைவர் ஷீலாராணி சுங்கத் அவர்களின் தீவிர முயற்சியால், அறிவொளி இயக்கத்தின் மூலமாக 1990-1992 காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டனர் என்பது நம்மில் பலரின் கவனத்தை ஈர்க்காத மிகப் பெரும் சாதனைதானே!

//முகநூல் பகிர்வு//

நன்றி: தோழர் நலங்கிள்ளி


No comments:

Post a Comment