தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

வல்லம். மார்ச்.15 பல்கலைக் கழக மாணவர்களிடையே மற்றும் தஞ்சைப் பகுதியில் உள்ள நகர் மற்றும் கிராமப்புற மக்களிடையே மனித உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தவும், மேலும் அதனை சார்ந்த ஆராய்ச்சி ஆய்வுகள் மேற் கொள்ளவும் தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல் கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக மகளிர் தினத்தன்று (08.03.2023) மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிஅரசர் எஸ்.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில், மாநில மனித உரிமை ஆணைய செயலாளர் மருத்துவர் கே.விஜயகார்த்தி கேயன், இ.ஆ.ப. பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இன்றைய இளைஞர்கள் குறிப் பாக மாணவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமு தாயத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள எளியோர்கள் மத்தியிலும் மனித உரிமைகள் பேணுதற்கு பெறும் உதவியாக இருக்கும் என கூறினார். 

இதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பூ.கு.சிறீவித்யா அவர்கள் பேசும் பொழுது பல்கலைக்கழகம் நடத்தி வரும் பெரியார் புரா திட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்தால்  தத் தெடுக்கப்பட்ட 67 கிராமங்களில் பேராசிரியர்களும், மாணவர் களும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செய்துவருவதாக வும் கூறினார். மாநில மனித உரிமை ஆணையத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மனித உரிமைகள் காக்கும் வண்ணம் இப்பல்கலைக்கழகம் பெரியார் புரா கிராமங்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும், மேலும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் விழிப் புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள், ஆராய்ச்சிகள் மற்றும் கருத் தரங்குகள் நடத்தும் என உறுதி யளித்தார். 

தனது உரையின் முடிவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி கூறினார். 

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதி மன்ற நீதி அரசர் ஆர்.ஹேமலதா அவர்கள், சென்னை உயர்நீதி மன்ற வழக் குரைஞர் அ.அருள்மொழி அவர்கள், பெரியார் மணியம்மை பல் கலைக்கழக சமூகப்பணித் துறை இணைப் பேராசிரியரும், பெரி யார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ) முனைவர் ஆனந்த் ஜெரார்டு மற்றும் அர சியல் அறிவியல் துறை தலைவர் முனைவர் ஆர்த்தி சரவணன் அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment