ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசின் மனுமீது விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசின் மனுமீது விசாரணை

உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 15 தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். 

அவருக்கும் ஆளும் அரசுக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆளுநர் தமிழிசையின் செயல் பாடுகளுக்கு தொடர்ச்சியாக தெலங் கானா அரசு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்வை கூட முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுந ருக்கு உத்தரவிடக்கோரி, தெலங் கானா தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி சார்பில் உச்சநீதிமன் றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய் யப்பட்டது.

ஆளுநரின் இச்செயலை அரச மைப்பு சட்டம் அளித்துள்ள உரி மைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment