கட்சித் தாவல் தடை சட்டமும் உச்சநீதிமன்றத்தின் தவறான விளக்கமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

கட்சித் தாவல் தடை சட்டமும் உச்சநீதிமன்றத்தின் தவறான விளக்கமும்

ப்பி. டி.  ட்டி.  ஆசார்யா 

பல ஆண்டு  காலம் நிலவிய சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவலால் ஏற்பட்ட அனைத்து  குழப்பங்களுக்கும் தீர்வாக  கட்சித்  தாவலை தடை செய்யும்  அரசமைப்பு  சட்ட (10  ஆவது  அட்டவணை) சட்டம் 1985இல் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மிகுந்த அளவு கொண்ட, அதிக தீவிரம் பொதிந்த, பொறுப்பற்ற தன்மை மற்றும் கட்டுப்பாடற்ற பகை  உணர்வு ஆகியவை 1960ஆம் ஆண்டுகளில் காணப்பட நேர்ந்த கட்சித் தாவல்களில் பெரும்பாலானவை அதன் பின்னர் முடிவுக்கு வந்துவிட்டன. இத் தகைய கட்சித் தாவல்களால் அடிக்கடி  ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டது  மட்டு மன்றி,  அதிகார வெறி கொண்ட  அரசியல்வாதிகளால். அரசியல் கட்சி களில் ஒரு பெரிய  நிலையற்ற தன்மையை உரு வாக்கவும் முடிந்தது. கிஹோடோ ஹெல்லோகன் வழக்கில்,  உச்சநீதிமன்றம் முதன் முறையாக ஓர் ஒருங்கிணைந்த சுருக்கமான தீர்ப்பில், கட்சித்  தாவலை ஓர் மிகப்  பெரிய அரசியல் கேடு என்று  விவரித்ததுடன், சட்டம் இயற்றுவதன் மூலம்  இந்தக் கேட்டை தடுப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ள உரிமையை நிலைநாட்டியது.

அதன் பின்னர் பல ஆண்டுகள் கடந்த பிறகும், இந்திய சட்டமன்றங்களில்  ஏற்பட்ட அதிர்வுகள். குறிப்பாக  கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிர்வுகளால்,  கட்சித்  தாவல் தடை  சட்டத்தால் ஏற்பட்ட அரசியல் நிலையற்றத்தன்மை  முடிவுக்கு  வந்துவிடவில்லை போலவே தோன்று கிறது. மகாராட்டிர மாநிலத்தில் நடப்பவை இதற்கு  ஒரு சரியான எடுத்துக் காட்டாக விளங்குகிறது. 

மிகுந்த  பயன் அளிக்கும்  நோக்கங்கள்

மகாராட்டிர சட்டமன்றத்தில் எழுந்துள்ள  அரசமைப்பு சட்ட முக்கியத்துவம் வாய்ந்த கேள் விகளைக் கையாள்வதற்கு முன் (அது இப்போது உச்சநீதிமன்றத்தின்  முன் உள்ளது)  இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட கட்சித் தாவல் தடை சட் டத்தைப் பற்றி ஒரு சில பொதுவான விடயங்களைக்  கூறவேண்டி இருக்கிறது. உண்மையைக் கூறுவ தானால், இந்த  சட்டத்தை மிக நெருக்கமாக இருந்து படித்துப் பார்த்தால், இந்த சட்டம் இரு முக்கியமான நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதை அது காட்டும்.  முதலாவதாக கட்சி  தாவும் உறுப்பினர்களை பதவி இழக்கச் செய்தல். இரண்டாவதாக, அரசியல் கட்சிகளின் ஆட்சியை நிலையற்றதாக செய்வதைத் தடுப்பது ஆகும்.  உண்மை என்னவென்றால், மிக நன்றாக அமைக் கப்பட்ட அரசியல்  கட்சிகளில் இருந்தும் உறுப் பினர்கள் அடிக்கடி கட்சித் தாவுவதால், அக் கட்சிகள் பலமிழந்து  போகின்றன. மூழ்கிக் கொண்டு இருக்கும் கப்பல்களை விட்டுவிட்டு, பசுமையைத் தேடி பறந்து செல்லும் போக்கின் காரணமாக,  தங்களது கட்சி உறுப்பினர்களை கட்சி தாவாமல் பாதுகாத்து வைத்திருப்பது  அரசியல் கட்சிகளுக்கு மிகவும் கடினமானதாக இருப்பதே ஆகும்.  இந்திய   ஜன நாயகம் தவிர்க்க  இயலாதபடி, கட்சி நடை முறையைக்  கொண்ட தாகும்.  இந்த நடைமுறையில் நிலைத் தன்மை கொண்ட கட்சிகளால் மட்டுமே  நிலையான மக் களாட்சியைத் தர முடியும். அரசியல் கட்சிகளைச் சேராதவர்கள் சட்டமன்ற  உறுப்பினர்களாக,  மக்கள் பிரதி நிதிகளாக  தேர்ந்து எடுக்கப்பட்டாலும் கூட, அவர்களால் ஓர் அரசை நடத்த முடியாது.  அரசு என்பது, நோக்கத்தில் ஒற்றுமையும், கோட் பாட்டுத் தெளிவு, இணக்கமாக செயல்படுதல் ஆகியவை தேவைப்படும் மிகமிக சிக்கலான அமைப்பாகும். இத்தகைய நோக்கங்கள் எல்லாம், கோட்பாட்டி னால் நடத்திச்  செல்லப்படும், நன்கு அமைக்கப்பட்ட  அரசியல் கட்சிகளில் இருந்து தான் வரும்.  இந்த  உலகில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக நாட்டுக்கும் இந்த உண்மை பொருந்தும். 

10ஆவது  அட்டவணையில் சேர்க்கப்பட்ட இரண்டு விதிகளில் இருந்து இந்த  நோக்கம்தான் கட்சித் தாவல் தடை சட்ட நோக்கத்தின்  முக்கிய  கவனக் குவிப்பாக இருந்தது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு  அரசியல் கட்சியில் இருந்து பிரிந்து  போவதற்கும், வேறு ஒரு அரசியல் கட்சியுடன்; ஒன்றாக இணைவதற்குமான இடம் இந்த விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அட்ட வணையின் மூன்றாவது பத்தி நீக்கப்பட்டதனை அடுத்து, கட்சியில் பிளவு ஏற்படுவது  என்பது  தகுதி  நீக்கத்திற்கு எதிரான  ஒரு வாதமாக இருந்தது  முடிவுக்கு வந்தது. இந்த  சட்டத்தின் உண்மையான நோக்கத்தை  முறையாக  புரிந்து கொள்வதற்கு நீக்கப்பட்ட  அந்த முந்தைய விதியை  நெருக்கமாகப்  பார்க்கவேண்டிய தேவை உள்ளது. இந்த விதியின் கீழ், ஒரு அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டு, அக்கட்சி  உறுப் பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அந்த  குழுவில் சேர்ந்துகொண்டால், அந்த உறுப் பினர்களுக்கு பதவி நீக்கத்தில் இருந்து விலக்கு  கிடைக்கும். தாய்க்கட்சியில்  பிளவு ஏற்பட்டால் மட்டுமே, அந்த மூன்றில்; ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவி நீக்கத்தில் இருந்து தவிர்ப்பு பெறுவார்கள் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய  ஒன்றாகும்.   மூன்றில் ஒரு பங்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கத்தில்  இருந்து  விலக்கு பெறுவதற்கு. தாய்க் கட்சியில் பிளவு ஏற் படவேண்டும்  என்பது ஒரு முன்  நிபந்தனையாகும். 

வேறு சொற்களில் கூறுவதானால், தாய்க் கட்சியில் பிளவு ஏற்படாமல்,  மூன்றில் ஒரு பங்கு  சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் கட்சியை விட்டு வெளியே சென்றால், அவர்கள் அனை வருமே பதவி நீக்க  தண்டனைக்கு உட்பட்டவர்கள் என்றுதான் கூறவேண்டும். இந்த  பத்தி நீக்கப்பட்ட பிறகு, தாய்க்கட்சியில் பிளவு ஏற்படவேண்டும் என்பது  பதவி  நீக்கத்தில் இருந்து தவிர்ப்பு பெறு வதற்கான  பாதுகாப்பாக இனியும் அது இருக்காது. ஒரு அரசியல் கட்சி பிளவுபட்டாலும் கூட, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பதவி நீக்க பாதுகாப்பு கி;டைக்காது. 

மூன்றாவது பத்தி நீக்கப்பட்டதன் பாதிப்பு இதுதான். ஆனாலும்,  அதில் உள்ள  முக்கியமான குறிப்பு என்னவென்றால், சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கத்தில் இருந்து தவிர்ப்பு பெற உரிமை கோரும்போது, தாய்க் கட்சியில் பிளவு ஏற்பட்டு இருக்கவேண்டிய தேவை எப்போதுமே இருக் கிறது.

ஒருங்கிணையும் பிரச்சினை

கட்சி தாவும் உறுப்பினர்களுக்கு பதவி நீக்கத்தில் இருந்து தவிர்ப்பு வழங்குவதற்கு  நான்காம்  பத்தியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை என்னவென்றால்,  தாய் அரசியல் கட்சி மற்றொரு கட்சியுடன்  இணையவேண்டும் என்றால், அக் கட்சியில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அந்த இணைப்புக்கு ஒப்புக் கொள்ளவேண்டும் என்பதுதான். பிளவு ஏற்படுவதைப் போலவே இந்த இணைப்பிலும், வேறு  ஒரு அரசியல் கட்சியுடன் இணைவது  பதவி நீக்கத் தவிர்ப்பு கேட்பதற்கான முன் நிபந்தனையாகும். கட்சியில் பிளவு ஏற்படுவது, இணைப்பு ஏற்படுவது தொடர்பான அட்ட வணையின்  அந்த பத்தி விதிகள் நீக்கப்பட்டதை நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து பார்த்தால், ஒன்று மட்டும்  தெளிவாகத்  தெரிகிறது. கட்சியில் பிளவை ஏற்படுத்தவோ  அல்லது இணைப்பை ஏற்படுத்தவோ சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  சுதந்திரம் இல்லை என்பதுதான் அது. இதன் காரணம் கட்சி தாவல் தடை சட்டத்தினால் சட்டப் படி அவ்வாறு  தடை செய்யப்பட்டுள்ளது தான். இந்த இரு விடயங்களிலும், தாய்  அரசியல் கட்சிதான் அந்த முடிவை எடுக்க வேண்டும்.

தகுதி நீக்கத்தில் இருந்து பத்தி 4  இன்படி தவிர்ப்பு  கோருவதற்கு  தாய் அரசியல் கட்சியில் ஏற்படும் பிளவு  மற்றும்  இணைப்புக்கு அடிப் படையாக விளங்குவது ஆகும். கட்சித்  தாவல் காரணமாக பதவி நீக்கம் செய்வதில் இருந்து தவிர்ப்பு, மூன்றில் இரண்டு  பங்கு  உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே அந்த  இணைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்பது  தெளிவாகத் தெரிகிறது. சட்டமன்றத்திற்கு வெளி யிலும்கூட  ஓர் இணைப்பு ஏற்பட முடியும்.  மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக் கொண்டால் தவிர  அதனால் எந்த விளைவும் ஏற்படாது.

மகாராட்டிர வழக்கின் மூலக் கரு

மகாராட்டிர வழக்கில் பல ஆர்வம் அளிக்கும் அரசமைப்பு சட்டப்படியான கேள்விகள் எழுந்தன.  நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்டி ருக்க வேண்டிய கேள்வி,  எந்தப் பிரிவின் கொறாடா அதிகார பூர்வமாக சட்டப்படி செல்ல தக்கது என்பதுதான். பிரிந்து  சென்ற பிரிவினர் தங்களின் சொந்த கொறடாவைத் தேர்ந்து எடுத்துக் கொண்டுவிட்டனர் என்றும், அந்த ஆணை சிவசேனாவின் அனைத்து  சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொறடா   பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுவதால்,   அந்த   ஒன்றை மட்டுமே வைத்துக்  கொண்டு இந்த ஒட்டு  மொத்த பிரச் சினையும் தீர்க்கப்பட்டிருக்க முடிந்திருக்கும்.

ஆனால், எந்தப் பிரிவின் கொறடா  பிறப்பித்த ஆணை சட்டப்படி செல்லத்தக்கது என்பதை பத்தி 2(1)(ஏ)  இல் தெரிவிக்கப்பட்டுள்ள (ஏ) என்ற விளக்கத்தின்படி முடிவு செய்யப்பட்டு இருந் திருக்க வேண்டும்.  ஒரு வேட்பாளர் எந்த அரசியல் கட்சி சார்பாக தேர்தலில் போட்டி இடுவதற்கு  நிறுத்தப்பட்டு வெற்றி  பெற்றாரோ அந்தகட்சியின் சட்டமன்ற உறுப்பினராகக் கருதப் பட வேண்டும் என்று  அந்த விளக்கம்  கூறுகிறது. சட்டப்படி  செல்லத்தக்க கொறடா  ஆணை பிறப் பிக்க இயன்ற  கொறடா உத்தவ்  தாக்கரே தலை மையிலான  கொறடா ஆணைதான் என்பது இந்த  விளக்கத்தினால் எந்தவித  குழப்பமும் இன்றி மிகத் தெளிவாகத்  தெரிகிறது. கட்சி தாவும் உறுப்பினர்களை  தகுதி நீக்கம்  செய்வ தற்காக இயற்றப்பட்டதுதான்  இந்த  தடை சட்டமே அன்றி, கட்சி தாவுபவர்களுக்கு  உதவி செய்வ தற்காக இயற்றப்படவில்லை.

உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தவறான  முடிவு

ஆனால், தேர்தல்  சின்ன ஆணையின் 

15 ஆவது பத்தியின்படி, இந்த வழக்கை விசாரித்து  முடிவுக்குக் கொண்டு  வருவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம்  அனுமதி அளித்தது.  இது குதிரையை வண்டிக்குப் பிறகு கட்டுவது போல இருக்கிறது.  10ஆவது அட்ட வணை  என்பது ஒரு அரசமைப்பு சட்டமாகும். பதவிநீக்க வழக்குகளில், தேர்தல் சின்ன ஆணையின் 15  ஆவது பத்திக்கு  அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை  விட அந்த சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன்  என்றால், தேர்தல் சின்ன ஆணை என்பது சட்டத்தினால்  இயற்றப்பட்ட ஒரு உபவிதியே என்பதாகும்.

அதன்படி தேர்தல் ஆணையம் பிறப்பித்த தவறான ஆணை, 10ஆவது அட்டவணை செயல்படுவது என்பது ஒரு பொருட்டே அல்ல என்பது போல,  மிகுந்த  சிக்கலுக்கு உள்ளாக்கி விட்டது.

இந்தக்  கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம். கட்சியை பிளவுபடுத்தவோ,  அதனை வேறு ஒரு கட்சியுடன் இணைக்கவோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆவது அட்டவணையின் படி  சுதந்திரம் இல்லை. தாய்  கட்சி மட்டுமே அதனைப்பற்றி முடிவு செய்யமுடியும்.  அந்த முடிவை சட்ட மன்ற உறுப்பினர்கள்  ஏற்றுக்  கொள்ளலாம் அல்லது  ஏற்க மறுக்கலாம்.  சட்ட மன்ற உறுப்பினரை அந்த தேர்தலில் வேட் பாளராக நிறுத்திய தாய் அரசியல்கட்சியினால் மட்டுமே சட்டப்படி செல்லத்தக்க கொறடா  ஆணையை பிறப்பிக்க இயலும், அதனை முதலா வதும்  மிகமிக முக்கியமானதுமான  பிரச்சினை யாகக் கருதி இந்த பிரச்சினையை உச்சநீதி மன்றம் முடிவு செய்திருக்க வேண்டும்.  அரசமைப்பு சட்ட 142ஆவது பிரிவின்படி  இதனால், தாக்கரே தலை மையிலான தாய்  அரசியல் கட்சிப் பிரிவுக்கு உரிய நியாயமும் நீதியும் வழங்கப்பட்டிருக்கும்.

நன்றி :  'தி  இந்து' 07-03-2023

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment