யார் சிறைக்கு போக வேண்டும், யார் செல்லக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

யார் சிறைக்கு போக வேண்டும், யார் செல்லக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?

பா.ஜ.க.வை சாடிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா, மார்ச் 24 "யார் சிறைக்குப் போக வேண்டும், யார் செல்லக் கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?" என்று பா.ஜ.க. தலைவர்களை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சாடினார்.

பீகார் மாநில துணை முதலமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: இது (ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு) ஒரு சட்ட பூர்வமான விஷயம், நாங்கள் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடுவோம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள திரைக்கதை எழுத்தாளர் யார் என்பதுதான் உண்மையான கேள்வி. ஏன் அவர்களால் சுயா தீன நிறுவனங்களை சுதந்திர மாக  இருக்க அனுமதிக்க முடியவில்லை?. அதுதான் உண்மையான கேள்வி. நீங்கள் அந்த நிறுவனங்களை கடத்திவிட்டீர்கள். என்னை கைது செய்தாலும் அல்லது செய்யா விட்டாலும் என்ன வித்தியா சம்? உண்மைக்கு என்ன பயம்? இது குறித்து ஏற்கெனவே இரண்டு முறை சி.பி.அய். விசா ரணை நடத்தியது. 

கடந்த ஆறு ஆண்டுகளாக என்ன நடக்கிறது? புதிதாக ஏதாவது சொல்லுங்கள். புதிய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள். யார் சிறைக்குப் போக வேண்டும், யார் செல்லக் கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்? இது சர்வாதிகாரமா? அதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம். அவர்கள் எல்லா நிறுவனங் களையும் தங்கள் கட்டுப்பாட் டில் வைத்திருக்கிறார்கள். அத னால்தான் அரசியல் சாசன மும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன. அவர்கள் தங்கள் சொந்த அஜண்டாவை செயல் படுத்த விரும்புகிறார்கள். எல் லாவற்றையும் கட்டுப்படுத்து கிறார்கள். நாங்கள்  (அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம்) ஒன்று சேர்ந்துள் ளோம்,  அதனால் அவர்கள் 2024 பொதுத்தேர்தல் பற்றி பயப்படுகிறார்கள். அவர்கள் பீதியடைந்துள்ளனர்.  மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பதிலளிப்பார்கள். 

புதிய அரசாங்கத்திற்கு நம் பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது அன்றும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அந்த ரெய்டு கள் என்ன ஆனது? அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்? அல்லது 2017க்கு போகலாம், ரூ.8 ஆயிரம் கோடி பினாமி சொத்துக்கள் என்றார்கள். வருமான வரித்துறை , அமலாக் கத்துறை, சி.பி.அய். எல்லாம் எங்களைத் தொடர்ந்து வந் தன. இன்று 2023. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள், அந்த சொத்துகள் எங்கே போயின? அவர்களை யார் இயக்கினா லும், அது அமித் ஷாவாக இருக்கலாம், ஒரு திரைக்கதை எழுத்தாளர் அல்லது வசனம் எழுதுபவர் இருக்க வேண்டும். அவர்களை அவர்கள் மாற்ற வேண்டும், அதே விஷயம், மீண்டும் மீண்டும் கூறப்படுவது நன்றாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment