சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அறிவியல் நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அறிவியல் நாள் விழா

சேலம், மார்ச் 26- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சேலம் அம்மாப் பேட்டை வையாபுரி தெரு நக ரவை உயர்நிலைப் பள்ளியில், சேலம் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகம் ,  பள்ளியின் பெற் றோர் ஆசிரியர் அமைப்பின் ஒத்துழைப்போடு 28.02.2023 செவ்வாய் மாலை 3 மணிக்கு அறிவியல் நாள் விழா நடை பெற்றது.

“இந்திய அறிவியல் தின விழா”வை ‘உலக நன்மைக்காக உலக அறிவியல்’ என்ற ஒன்றிய அரசின் இலக்கை வலியுறுத்தும் வகையில்   நடத்தினர். இந் நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஏற்றுமதி யாளர் சு.இமயவரம்பன், வழக் குரைஞர் செல்வகுமார், திரைப் பட இயக்குநர் குமாரதாசன்  முன்னிலை வகித்தனர்.

சேலம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் வீரமணி ராசு தலைமை ஏற்று தனது தலைமை உரையில்  பகுத்தறிவு உணர்வினை  ஊட் டியதோடு, ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை கேட்க தூண்டினார்.

அறிவியலில் ஆயிரம் கேள் விகள் உண்டு. அவை யாவும் பதில் கிடைக்காத கேள்விகள். அதற்கு பதிலை தேடத் தேடத் தான் அறிவியல் வளரும். ஆனால், மதம் கடவுள் போன் றவைகளில் பதில்கள் காணப் படும் - கேள்விகளை கேட்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுடன். எனவே, கேள்வி களை அனுமதிக்காத பதில் களை (கடவுள் மதம்) காட்டி லும், பதில்கள் கிடைக்காத கேள்விகள் (அறிவியலை ஊக் குவிப்பதால்) மனித வாழ்க் கைக்கு உகந்தது;  உலக வாழ்க் கைக்கு உகந்தது என்று எடுத்து ரைத்து, ‘உலக நன்மைக்கு உலக அறிவியல்’ என்பதை நிறுவினார்.

மேலும், வழக்குரைஞர் தோழர் செல்வகுமார் அறிவியல் தினம் கொண்டாடப் படுவதின் நோக்கம் குறித்தும், திரைப்பட இயக்குநர்  தோழர் குமாரதாசன் அறிவியல் கண்டு பிடிப்புக்களின் தேவை பற்றி யும், அறிவியல் உண்மை பற்றி யும் உரையாடினர்.

பள்ளி மாணவர்கள் ஆர் வத்துடன் கலந்து கொண்டது பாரட்டத்தக்கது.  தங்கள் கண் டுபிடிப்புகளை வரிசைப்படுத்தி விளக்க உரை அளித்தவிதம் அருமையாக இருந்தது. எட்டாம்வகுப்பு மாணவர் இலிங்கேசன் முதல் பரிசு பெற்றார். இவர் மிஷிஸிளிவிற்கு தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூட நம்பிக்கையும் அதன் தெளிவுகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர்களின் உரையாடல் போற்றுதலுக்குரி யது. 

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ‘நீரை சேமிப்போம்’ என்ற தலைப்பிலான ‘ஊமை நாடகம்’ சிந்திக்க வைத்தது. அறிவியலும் மறைக்கப்பட்ட உண்மைகளும் என்ற தலைப் பில் மாணவர்களின் ஆங்கிலப் பாடல் இரசிக்கவும் சிந்திக்க வும் வைத்தது.  மாணவர்களை சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் வைத்து அறிவியல் தான் வாழ்க் கையின் ஆணி வேர் என்பதை உணர்த்திய இந்த அறிவியல் நாள் விழாவானது, பதில்களை தேடும் கேள்விகளுக்கான வாழ்க்கையை தொடங்கி வைத்துவிட்டது.

மாணவ, மாணவியர் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்களை சேலம் மாவட்ட பகுத்த றிவாளர் கழகம் வழங்கியது.

இப் பள்ளி ஆசிரியைகள் ஆர். பிரியா, எஸ்.லதா, வி.வ சந்தி, வி.மேகலா ஆகிய நால் வரும் மிக குறுகிய காலத்தில், நிகழ்வுக்கான ஏற்பாடுகளை யும், பள்ளி மாணவ மாணவியரை தயார் செய்ததும்,   பள்ளி மாணவ மாணவியர் அனை வரும் ஊக்கத்துடனும் உற்சா கத்துடனும் பங்காற்றியது மிகவும் போற்றுதலுக்குரிய செய லாகும். இறுதியில் மாணவர் கள் சார்பில் நன்றி கூறி நிகழ்வு முடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment