திரிபுராவில் பா.ஜ.க. வன்முறை - சென்னையில் சி.பி.எம். கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

திரிபுராவில் பா.ஜ.க. வன்முறை - சென்னையில் சி.பி.எம். கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் துணைத் தலைவர் பங்கேற்று கண்டன உரை

சென்னை,மார்ச்14- திரிபுராவில் பாஜகவின் வன்முறை வெறியாட் டத்தைக் கண்டித்து இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செய லாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 13_-3_-2023 அன்று சென்னை - மின்ட் மணிக்கூண்டு வள்ளலாளர் நகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கழக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மதிமுக கொள்கைப் பரப்புச் செய லாளர் ஆ. வந்தியத்தேவன், சட்டமன்ற உறுப்பினர்கள்  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.எச்.ஜவஹி ருல்லா தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்  பிபிஎம் (எம்.எல்) மாநிலச் செயலாளர் பழ.ஆசை தம்பி, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சி.பி.அய்.(எம்.)   மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப் பினர் எம்.ராமகிருஷ்ணன், சி.பி.அய்.(எம்)மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை) ஆகி யோர் பங்கேற்றனர். 

 கழகத்துணைத் தலைவர்

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆற்றிய கண்டன உரையில்,

"பாசிச பாஜக ஒன்றிய அரசு ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி ஆர்.ஆர்.எஸ்.அமைப்பின் சனாதனக் கொள்கையை தொடர்ந்து பரப்புவ தோடு, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அடக்குமுறையை ஏவி வருகிறார்கள். அப்படி தான் 450ஆண்டுகால பழை மையான பாபர் மசூதியை இடித்தனர்.

நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்யாமல் பிரிவினை வாதத்தைத் தாண்டி ஜாதியின் பெயரா லும், மதத்தின் அடிப்படையிலும் கலவ ரத்தை தூண்டிட நினைக்கிறார்கள். ஒரு போதும் வன்முறையை கட்ட விழ்த்து விடுபவர்களை தமிழ்நாடு அனுமதிக்காது என்றார்.

சமூகநீதி, மதச் சார்பின்மை கொள் கைகளைக் கொண்ட சக்திகள் ஒன்றி ணைந்து போராடி 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். 

ஒன்றிணைவோம்  வெற்றி பெறு வோம் என்றார்.


No comments:

Post a Comment