பல அதிரடி திட்டங்களுடன் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

பல அதிரடி திட்டங்களுடன் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல்

சென்னை, மார்ச் 26 பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.  சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. இதனால், கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி நிதி நிலை அறிக்கைகளை ஆன்லைனில் வெளியிட்டனர்.  

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சென்னை மாநகராட்சியில் அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்று மேயராக ஆர்.பிரியா, துணை மேயராக மகேஷ் குமார் பதவி ஏற்றனர். இவர்கள் பதவி ஏற்ற பின்னர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல சிறப்பு திட் டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன.

இந்நிலையில் 2023-2024ஆம் ஆண் டுக்கான நிதி நிலை அறிக்கை நாளை 27ஆம் தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்றக் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கையும், கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கையும் மேயர் பிரியா முன்னிலையில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். கூட்டத்தின் இறுதியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத் திற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இந்த நிதி நிலை அறிக்கையில் பல அதிரடி திட் டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment