அய்யா சொன்னதும் அம்மா வினவியதும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

அய்யா சொன்னதும் அம்மா வினவியதும்

03.10.1964 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடை பெற்றது. அதில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப் பிட்டார்கள்.

"எனக்கு என்று எந்த சொத்தோ பணமோ இல்லை. இருந்ததை எல்லாம் விற்று இந்த ஸ்தாபனத்தில்தான் போட்டு வளர்த்து உள்ளேன். ஏதோ மணியம் மைக்கு ஒன்றிரண்டு இருக்கின்றது அவ்வளவுதான் ஆகும்" என்று குறிப் பிட்டார்கள். தொடர்ந்து பேசிய அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

"அய்யா அவர்கள் பேசும்போது தமது சொத்துகளை எல்லாம் விற்று ஸ்தாபனத்துக்குச் சேர்ப்பித்தது போக எனக்கென்று ஏதோ விட்டு வைப்பதாகக் குறிப்பிட்டார்கள். அப்படி எனக்கு என்று  என்ன விட்டு வைத்திருக்கின்றார்? என்ன விபரம் என்று இதுவரை தெரியாது. அவர்களும் கூறியது இல்லை. எனக்கு அப்படி சொத்து வேண்டிய அவசியத்திலும் இல்லை.

எனக்கு என்னையே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அறிவு எனது தாய் தந்தையர்களால் அளிக்கப்பட்டவளா கத்தான் இருக்கின்றேன். அப்படி அய்யா அவர்கள் எனக்கு என்று வைத்து இருப்பாரேயானால் அதையும் இப்படிப் பட்ட கல்வி நிறுவனங்களுக்காகத்தான் செலவு செய்வேன்" என்றும் பதில் கூறினார்கள்.

அய்யா அவர்கள் சொன்னபடியே அம்மா அவர்களுக்கு சில சொத்துகளை விட்டுச் சென்றார்கள். அம்மா அவர்களும் சொன்னபடியே அந்தச் சொத்துகளை தாம் உயிரோடு இருக்கும் பொழுதே பெரியார் மணியம்மை கல்வி அறப்பணி கழகம் என்னும் பெயரில் ஓர் அறக்கட்டளையாக்கி (தற்போது பெரியார் மணியம்மை அறிவி யல் தொழில் நுட்பக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது) ஒப்படைத்து கல்வி நிறுவனங்கள் அதன் பெயரால் நடக்கும்படி ஏற்பாடும் செய்துவிட்டார்கள். அதன்படி இன்று கல்வி நிறுவனங்கள் உருவாக்கப் பட்டு இருக்கின்றன; நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன.


No comments:

Post a Comment