அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16 அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16 அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள்

இரண்டு கொள்கைகள்

திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள் கைகளுள் ஒன்று நாடு பிரிய வேண்டும் என்பது, மற்றொன்று ஜாதி ஒழிய வேண்டும் என்பது. இந்த இரண்டைத் தவிர வேறு முக்கியக் கொள்கை இல்லை. இதை நம்மைத்தவிர சொல்லவும் வேறு யாரும் இல்லை. ஜாதி ஒழியவேண்டும் என்பது இன்று சாதாரண வார்த்தையாகி விட்டது. ஆனால், ஒரு காலத்தில் பெரியார் அவர்கள் ஜாதி ஒழியவேண்டும் என்று சொன்னபோது நாட்டில் பணக்காரன் முதல் பாமரன்வரை மதவாதிகளிலிருந்து சாதாரண மனிதன்வரை கட்டுப்பாடாக எதிர்த்தார்கள். இன்று பலர் ஆதரிக்கக் காரணம். அந்தக் கொள்கை இன்று செல் வாக்குப் பெற்று விட்டது. இன்று மந்திரி கள் வரையில் பேசுகிறார்கள் என்றாலும், பலர் அதைச் சொல்லிப் பிழைக்கவே கருதுகி றார்கள். உண்மையாக ஜாதி அடிப்படைக் கொடுமைகளை எடுத்துச் சொல்ல நம்மைத் தவிர வேறு ஆளில்லை.

அடுத்து இன்று சுதந்திரம் வந்துவிட்ட தாகச் சொன்னாலும் உண்மையில் வெள் ளைக்காரன் போனபின் அவன் காலத்தில் இருந்த நலம்கூட இப்போது இல்லை.

வடநாட்டானுடைய ஆட்சிதான் ஏற் பட்டதே தவிர, சுதந்திர ஆட்சி ஏற்பட வில்லை; இந்த நாட்டின் உண்மையான சுதந்திரத்தைப் பற்றிப் பேசவும் நம்மைத் தவிர, மற்றவர்கள் ஆள் கிடையாது. சட்ட சபைக்குப் போவதிலும் மற்றவைகளிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆகையால், இந்த இரண்டு காரியங்கள் வேண்டுமானால், பெரியார் அவர்களால் தான் நடைபெற வேண்டும். (Backward Community)  என்று அதாவது பிற்படுத்தப் பட்ட மக்கள் என்று உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இப்படிப்பட்ட ஜாதிக் கொடுமைகளை எடுத்துக்கூறி இப்போது செய்யும் பிரச்சாரம் போதாது; இன்னும் அதிகமாக நடைபெற வேண்டும்.

கலப்பு மணம், ஒருவர் வீட்டில் மற்றவர் பேதமின்றி உண்ணல், பழகல் இவை மூலம்தான் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்.

அதையெல்லாம் பெரியார் அவர்கள் விளக்கமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

(23, 24.11.1956 ஆகிய நாள்களில் மாயூரம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் அன்னை மணியம்மையார் ஆற்றிய தலைமையுரை - விடுதலை. 29.11.1956)

---

யார் காரணம்?

ஆனந்த மார்க்கம், ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி ஸ்தாபனங்கள் தமிழ் நாட்டிலே தலையெடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்ன? எங்கள் இயக்கத்தின் தீவிரமான பகுத்தறிவுப் பிரச் சாரத்தினால்தான் என்பதை எவரா லும் மறுக்க முடியுமா?

பெண்ணடிமை ஒழிப்பு. கலப்புத் திரு மணம். விதவைகளுக்கு மறுவாழ்வு. பெண்களுக்குச் சொத்துரிமை, விவாக ரத்து உரிமை. கர்ப்பத் தடை, கல்வி உரிமை இவற்றிற்காகவெல்லாம் இன்றைக்குச் சரி யாக 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குரல் கொடுத்துக் கொண்டு வந்ததோ டல்லாமல், அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகச் சொல்லொணாத் துயரங் களையும். 

கஷ்ட நஷ்டங்களையும் இன்று வரை ஏற்றுக் கொண்டு வருகிற இயக்கத் தினர் எங்களைத் தவிர வேறு யார்? தந்தை பெரியார் அவர்களைத் தவிர இதற்கு உரிமை கொண்டாட எவரேனும் இருக்கி றார்களா?

- அன்னை மணியம்மையார். 'விடுதலை' 24.4.1976

No comments:

Post a Comment