தகவல் தொழில் நுட்ப சேவை பயன்பாட்டுக்கு ரூ.8000 கோடி முதலீட்டில் கட்டுமான திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

தகவல் தொழில் நுட்ப சேவை பயன்பாட்டுக்கு ரூ.8000 கோடி முதலீட்டில் கட்டுமான திட்டம்

சென்னை, மார்ச்  26 - பிரபல கட்டுமான நிறுவனமான  காசாகிராண்டு வர்த்தக ரியல்எஸ்டேட்  பிரிவில்  கால் பதிக்கிறது.   

காசாகிராண்டு குழும நிறுவனங்களில் மற்றுமொரு புதிய நிறுவனமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இதில் அந்நிறுவனம்  அடுத்த 5 ஆண்டுகளில்  ரூ.8000 கோடி முதலீடு செய்ய திட்டங்கள் வகுத்திருக்கிறது.  

தகவல் தொழில்நுட்பம்  அதுசார்ந்த சேவை நிறுவ னங்கள் இயங்கும் கட்டடங்கள், பணியிடத்துடன் கூடிய குடியிருப்புகள்,  சில்லறை விற்பனை நிறுவனங்களை உள்ளடக்கிய வணிக வளாகங்கள் உட்பட  உலகத் தரத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வர்த்தக ரீதியிலான கட்டட அமைவிடங்களை 2027-ஆம் ஆண் டிற்குள்  ஒரு கோடி சதுர அடி  பரப்பளவில் உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது . இதற்காக சென் னையில் 20 லட்சம் சதுரடி அடி பரப்பளவில் வர்த்தக  அமைவிட திட்டத்தை தொடங்க தயார் நிலையிலிருக்கும் இந்நிறுவனம், 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பரப்பை மிகவிரைவில் கைவசப்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதன்  மேலாண்மை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment