இந்தியாவில் 1590 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

இந்தியாவில் 1590 பேருக்கு கரோனா

புதுடில்லி, மார்ச் 26 ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (25.3.2023) காலை வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 146 நாட்களில் இல்லாத அளவாகும். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மகாராட்டிராவில் மூவர், கருநாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,30,824 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,47,02,257 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.02 சதவீதம் ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 98.79 சதவீதமாகவும் உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,41,62,832 ஆக அதிகரித்துள்ளது.கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 1.33 சதவீதம் ஆகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 1.23 சதவீதம் ஆகவும் உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.65 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில்....

தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 51, பெண்கள் 46 என மொத்தம் 97பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். சென்னையில் 25 பேருக்கும், கோவையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.குவைத்தில் இருந்து வந்தஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 96,110 ஆக அதிகரித்துள் ளது. இதுவரை 35 லட்சத்து 57,478 பேர் குணமடைந்துள் ளனர். நேற்று மட்டும் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாடுமுழுவதும் 582 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று (25.3.2023) உயிரிழப்பு இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment