ஆண்டிப்பாளையம் பஞ்சாட்சரம் படத்திறப்பு கழக செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு நினைவேந்தல் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

ஆண்டிப்பாளையம் பஞ்சாட்சரம் படத்திறப்பு கழக செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு நினைவேந்தல் உரை

புவனகிரி, பிப். 8 கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் ஆண் டிப்பாளையம் காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் முருகனின் தந்தையார் சுயமரியாதைச் சுட ரொளி பஞ்சாட்சரம் அவர்களின் நினைவேந்தல் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 

இந்நிகழ்ச்சிக்கு கழக செயலவை தலைவர் சு அறிவுக்கரசு தலைமை தாங்கி படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார் நிகழ்ச் சியில் காட்டுமன்னார்குடி ஒன்றிய திமுக செயலாளர் முத்துசாமி, மறுமலர்ச்சி திமுக மாவட்ட கவுன்சிலர் எம்.எஸ்.கந்தசாமி, மருத்துவர் பாண்டியன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கடலூர் மண்டல தலைவர் ஆர் பி எஸ் பன்னீர்செல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில ஆலோ சனை குழு உறுப்பினர் மு.பால குருசாமி, காட்டுமன்னார்குடி ஒன் றிய அதிமுக செயலாளர் எம்.என்.சிவக்குமார், ஆசிரியர் விரட்டி குப்பம் ஜெயராமன், மாவட்ட துணை தலைவர் பெரியார் தாசன், பொதுக்குழு உறுப்பினர் வலசை அரங்கநாதன், காரைக்கால் மண் டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கழக பேச்சாளர் புவனகிரி யாழ் திலீபன், மேனாள் மாவட்ட அமைப் பாளர் கூ.தென்னவன், பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் கோ.நெடுமாறன் ஜெயபால், பாளையங்கோட்டை பெரியண்ண சாமி, மு.குணசேகரன், ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இரங்கல் உரை ஆற்றினர். நிகழ்ச் சியை  ஒருங்கிணைப்பு செய்து இணைப்புரை வழங்கினார். பேராசிரியர் ஜெயக்குமார் அறிவு மணி வரவேற்புரை ஆற்றினார். 

இறுதியாக ஆண்டிப்பாளையம் முருகன் நன்றியுரை ஆற்றினார். படத்தை திறந்து வைத்து செய லவை தலைவர் அறிவுக்கரசு சுய மரியாதை சுடரொளி பஞ்சாட்சரம் அவர்களைப் பற்றியும், பெரியார் அண்ணா கொள்கைகள் எந்த அளவிற்கு இன்றைக்கு நாட்டு மக்களுக்கு பயனாக இருக்கிறது என்று விளக்கமாக உரையாற்றினார். பின்னர் கழகப் பொதுச் செயலா ளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் வருகை தந்து ஆண்டிப் பாளையம் முருகன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறு தல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment