பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மை துறையில் பன்னாட்டுப் பயிலரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மை துறையில் பன்னாட்டுப் பயிலரங்கம்

வல்லம், பிப். 8- பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் மேலாண்மையி யல் துறையும் இணைந்து 2.2.2023 அன்று தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் பன்னாட்டுப் பயில ரங்கத்தினை நடத்தியது. 

அப்பயிலரங்கத்தில் திருச்சி ரோசா இ-சொல்யூசனலிருந்து வருகை தந்திருந்த கருத்தாளர் செ.எட்வர்ட் பாக்கியராஜ் பயிற்சி ஆசிரியர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு (Application of ICT for the teacher Education) என்னும் தலைப்பில் சொற் பொழிவாற்றினார். தமிழியல் துறை, மகாத்மா காந்நி நிறுவனம் மொரீசியஸ்லிருந்து வருகை தந் திருக்கும் முனைவர் உமா அழகிரி கல்வியியலில் மொழித் தொழில் நுட்பத்தின் பங்கு (The Role of Language Technology in Education)  என்னும் தலைப்பில் உரையாற்றி னார். அதில் தமிழ் மொழி முக்கி யத்துவம் பற்றி கூறினார். வெளி நாடுகளிலும் தமிழ்மொழி எவ்வித ஆற்றல் வகிக்கின்றது  என்றும் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித் தும் சிறப்பாக உரையாற்றினார். 

இந்நிகழ்வின் நிறைவு விழாவில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் கல்வியியல் துறைத்தலைவர் முனைவர் க.தமிழ்வாணன் வர வேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் பேரா முனைவர் திருவள்ளுவன் தலை மையுரையாற்றினார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் பேரா பு.கு.சிறீவித்யா சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் தற்கால கல்வி கற்றலில் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தினை விளக்கிக் கூறினார். 

மேலும் கிழக்கு ஆப்பிரிக்காவி லிருந்து வருகை தந்திருக்கும் எம். எஸ்.கணக்கியல் மற்றும் நிதியியல் வணிக மற்றும் பொருளியல் கல்லூரி சமரா பல்கலைக்கழகத்தின் பேரா முனைவர் சின்னையா அன்பழகன் பங்குபெற்றவர்களுக்கு பயிலரங்கத்தின் சான்றிதழ் வழங்கி நிறைவுரையாற்றினார். 

முனைவர் க.முருகேசன் கவுரவ உதவிப் பேராசிரியர் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் இப் பன்னாட்டு பயிலரங்க நிகழ்வினை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங் கினார்.  மேலும் இப்பன்னாட்டு பயிலரங்க நிகழ் வில் 477 ஆசிரிய மாணவ, மாணவி கள் பங்கேற்று பயனடைந்துள்ள னர். 

இறுதியாக பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை உதவிப்பேராசிரியர் கு. சேதுராஜன் நன்றியுரையாற்றினார். 

No comments:

Post a Comment