சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயங்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயங்கும்

சென்னை, பிப். 27-  பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப் பட்டிருக்கிறது.

மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் மக்களிடையே சென்னையில் வரவேற்பு அதிகரித்துள்ளதால் பெட்டிகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்டிரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.  சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மற்றும் காலை மற்றும் மாலை வேளைகளில் மெட்ரோவில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பலரும் சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட மெட்ரோவில் பயணிப்பது நல்லது என்று முடிவு செய்து பயணிக்க தொடங்கி இருப்பதால் வருங்காலங்களில் இன்னமும் கூடுதலாக மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.  இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment