அதானி குழும பிரச்சினை விசாரணை நடத்த வலியுறுத்தி பிப்.6-இல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

அதானி குழும பிரச்சினை விசாரணை நடத்த வலியுறுத்தி பிப்.6-இல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

புதுடில்லி,பிப்.4- அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள் ளது. 

பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழு மம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்,  அமெரிக் காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஜன.24-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில்  அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்அய்சி வைத்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீ தத்தை ஸ்டேட் பேங் ஆப் இந் தியா வங்கி வழங்கி உள்ளது என தெரிவித்திருந்தது. 

இதற்கு பதிலளிக்கும் வித மாக 29.1.2023 அன்று 413 பக்க அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், இது குறிப் பிட்ட அதானி நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற் றுமை, ஜனநாயக அமைப்பு களின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்ட மிட்ட தாக்குதல் என தெரிவித்திருந்தது.

இதற்கு, இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடைபடுகிறது என் றும், மோசடியை தேசியவாதத் தால் மறைக்க முடியாது என ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் மீதான ஹிண் டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி மற்றும் ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. 

இந்நிலையில், அதானி குழுமம் மீதான புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வலி யுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

எல்அய்சி, பாரத ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார். 

அதானி குழுமத்தில் செய்த முதலீடு குறித்து பாலிசிதாரர் களுக்கு எல்அய்சி பதிலளிக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment