Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் எச்சரிக்கை!
February 04, 2023 • Viduthalai

 குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே!

மோடி இந்துக்களுக்கு விரோதியா? 

திமுக செய்தித் தொடர்புத் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலையின் திரிபுவாதத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து - மாநிலத் தின் முன்னேற்றத்தைத் தடுக்க - முழுக் காட்சிப் பதிவை “கட் அண்ட் பேஸ்ட்” செய்து மதவெறிப் பித்துப் பிடித்து - மலிவான பிரச்சாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க. மாநிலத் தலைவர்  அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. செய்தித் தொடர்புத் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

“பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரி கத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாதம் 27-ஆம் தேதி மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய கழகப் பொரு ளாளர், சாலை விரிவாக்கப் பணிகளின்போது இயல் பாக ஏற்படும் சில இடர்பாடுகளையும், அவற்றைக் கடந்து மக்கள் நலன் கருதி அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் மேனாள் ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் சில கடந்தகால நிகழ்வுகளைச் சான்றாகக் கூறிப் பேசியுள்ளார்.

அதில், அவர் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப் பட்ட அந்தக் கோயில்களுக்குப் பதிலாக, இடிக்கப் பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும், அதுவும் கூடுதல் வசதிகளுடன் அவரே மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது பற்றியும் சுட்டிக்காட்டி - வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற் றுவது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், அந்தக் காணொலியில், அவர் மூன்று கோயில்களைத் தவிர்க்க முடியாமல் இடிக்க நேர்ந் தது பற்றிக் கூறியதை மட்டும், வெட்டியும், ஒட்டியும் திரித்தும் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள அண்ணாமலை, அதன் தொடர்ச் சியாக அவர் கோயில்களை கட்டிக் கொடுத்துள்ள தாகப் பேசியதைத் திட்டமிட்டே உள்நோக்கத்துடன் “எடிட்” செய்து மறைத்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர் அவர்கள் “சாலை விரிவாக் கப் பணிக்காக இடிக்கப்பட்ட அந்த மூன்று கோயில்களையும், மீண்டும் நூறு, இருநூறு பேர் அமர்ந்து சாப்பிடும் மண்டபம் உள்ளிட்ட வசதியுடன் சிறப்பாகக் கட்டிக் கொடுத்தோம். இதுபோல பல இடங்களில் மதநம்பிக்கை உள்ளவர்களை சமாதானப் படுத்தித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்” என்று அந்த உரையில் மிகத் தெளிவாகவே குறிப் பிட்டிருக்கிறார்.

ஆனால், அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்துவிட்டு அரைவேக்காட்டு அரசியல் நடத்த வந்த அண்ணா மலை, மேனாள் ஒன்றிய அமைச்சர் என்ற முறை யில் டி.ஆர். பாலு பேசிய காட்சிப் பதிவின் முன் பகு தியை மட்டும் வெட்டி வெளியிட்டுள்ளார். இன்னும் சொல்லப் போனால், அவர் அந்தக் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் பற்றிக் குறிப்பிட்ட உரையின் முழுமையான பேச்சு அடங்கிய செய்தியை, “தி பிரிண்ட்” இணையதளத்தில் முழுமையாக வெளியிட்டுள்ளனர்.

ஆனால், அண்ணாமலை பத்திரிகைகளையும் படிப்பதில்லை. அது போன்ற இணையதளங்களில் உள்ள முழுப் பேச்சினையும் படிப்பதில்லை. பாவம் அவருக்குப் படிக்கத் தெரியவும் இல்லை. முழு காட்சிப்பதிவைப் பார்க்கவும் தெரியவில்லை. ஆனால் கீழ்த்தரமான அரசியல் செய்வதற்காக ஒரு பேச்சை வெட்டி வெளியிட மட்டுமே தெரிந் திருக்கிறது.

இனி அவரை “கட் அண்ட் பேஸ்ட் அண்ணா மலை” என்றே அழைக்க வேண்டும் போலிருக்கிறது. மதவெறி துவேஷத்தைக் கிளப்ப வெட்டி ஒட்டி விஷத்தைக் கக்கியிருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு உருவாகியிருக்கும் ஒரு கேடு என்பதை இதுபோன்ற தனது அறமற்ற செயல்களால் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலையின் பாணியில் நான் கூறுவது என்றால், பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது, 2008 -ஆம் ஆண்டு குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவு படுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே, அந்த நடவடிக்கைக்காக இன்றைய பிரதமரும், அன்றைய குஜராத் முதலமைச்சருமான மோடி அவர்களை ஹிந்துக்களுக்கு விரோதி எனக் கூறினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகக் கோயில்களை இடிக்கும் பணியை குஜராத்தின் அன்றைய மோடி தலைமையிலான அரசு, ஒரு தீபாவளி நாளின் இரவில் தொடங்கியதை அண்ணாமலை அறிவாரா?

“ஹிந்துத்துவாவின் “போஸ்டர் பாய்” என்று மோடியை அழைக்கும் முன்னர், குஜராத் தலைநகர் காந்தி நகரில், ஒரே மாதத்தில் 80 கோயில்களின் ஆக்கிரமிப்பை அவர் அகற்றியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்ற முகவுரையுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு அப்போது தலைப்புச் செய்தி வெளியிட்டதே, அதுவாவது அண்ணாமலைக்குத் தெரியுமா?

ஓர் அய்.பி.எஸ் அதிகாரியாக இருந்து, தற்போது ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக ஆகிப் புதிய பரிணாமம் எடுத்திருப்பவருக்கு எந்தச் செய்தியையாவது முழுமையாக அறிந்து புரிந்து கருத்துகளை வெளியிடும் வழக்கம் இருக்கிறதா? ஒன்று அரைகுறையாகப் புரிந்து கொண்டு அபத்த மான கருத்துக்களைத் தெரிவிப்பது. இன்னொன்று வெட்டி ஒட்டி 'வீடியோ' வெளியிடுவது. இதற்கு அண்ணாமலை அரசியல் பேசுவதை விட்டு - ஒரு “கட் அண்ட் பேஸ்ட்” மய்யத்தைத் துவங்கி முழு நேரப்பணியாக செய்யலாம்.

வளர்ச்சிப் பணிகளுக்காகச் சட்டவிரோதமாகச் சாலைகளை, பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டியிருக்கும் வழிபாட்டிடங்களை அகற்றுவதும், அதற்கு மாற்றாக அருகே கட்டிக் கொடுப்பதும் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஒன்றுதான். அது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் இருக்கிறது.

நம் நாட்டின் சட்டம் பொது இட ஆக்கிரமிப்பை எத்தகைய கோணத்தில் அணுகுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ வழக்குகளில் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும் பல தீர்ப்புகளைச் சொல்லியிருக்கின்றன. மேலும் டி.ஆர். பாலு கோயில்களைப் பற்றி கூறிய அதே இடத்தில் ஒரு மசூதி, சர்ச் போன்றவையும் இடம் மாற்றிக் கட்டிக் கொடுக்கப்பட்டன.

அது மட்டுமின்றி, அவர் ஒன்றிய அமைச்சராக இருந்த காலத்தில் எந்த இடத்தில் வழிபாட்டிடங்கள் அகற்றப்பட்டாலும், அவை அம்மக்களின் ஒத் துழைப்போடு மீண்டும் கட்டிக் கொடுக்கப்பட் டுள்ளன. அந்த “அரசியல் அரிச்சுவடி” எல்லாம்   ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் அண்ணாமலைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

மற்றபடி தமிழ்நாட்டு மக்களின் கனவான சேது சமுத்திரத் திட்டம் போன்ற மாநிலத்தின் வளர்ச் சிக்கான திட்டங்களை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடனும், ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக் கட்டைகளை எப்படி சரி செய்வது என்பதையும் உணர்த்தவே அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கிடைத்த தனது அனுபவத்தை அந்த மேடையில் மேனாள் ஒன்றிய அமைச்சர்  டி.ஆர். பாலு  பேசியிருந்தார்..

ஆனால், அதையே அண்ணாமலை விஷமத் தனத்துடன் திரித்து வெளியிட்டு, அதன் மூலம் அற்ப மகிழ்ச்சியை அடைந்துள்ளார். ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய வழியின்றி, இடைத்தேர்தலில் போட்டியிட முடியாமல் திணறி, அ.தி.மு.க.விற்குள் இரு அணிகளை உருவாக்கி மோத விட்டு, அக் கட்சியை பலவீனப்படுத்தித் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க மிரட்டும் அரசியலை செய்து வரும் பா.ஜ.க. வின் அண்ணாமலைகளின் மூளைகளுக்கு மத வெறிப் பித்துப்பிடித்து வளர்ச்சிக்கு எது தேவை, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன வேண்டும் என்பது அறியாமல், திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது தேசிய கட்சிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் மட்டுமல்ல - மிகப்பெரிய அவலமும் ஆகும்!

“எல்லோருக்கும் எல்லாம்” என்பதே தி.மு. கழகத்தின் கொள்கையும், இலக்கும் என்று எங்கள் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன் றாடம் முழங்கி வருகிறார். தி.மு.கழகம் அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும் பாடுபடும் இயக்கம் என்பதை தனது “திராவிட மாடல்” ஆட்சி மூலம் நிறைவேற்றி வருகிறார்.

அதனை ஒரு பிரிவினருக்கு விரோதியாகச் சித்தரிக்க முயலும் சிறுநரிக் கூட்டத்தின் மலிவான தந்திரமே இது போன்ற “கட் அன்ட் பேஸ்ட்” 'வீடி யோ'க்கள்! இத்தகைய நாலாந்தர அரசியல் செய்வோர் மக்கள் மன்றத்தில் ஒருபோதும் ஆதரவைப் பெற முடியாது. எங்கள் முதலமைச்சரின் தலைமையிலான கழக அரசில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்படுகிறது.

திருக்கோயில் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடந்துவிட்டது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அண்ணாமலை இப்படி வெட்டியும், ஒட்டியும், திரித்தும் தரம்தாழ்ந்த செயலில் ஈடுபடுவது மகா கேவலமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகளை இழிவுபடுத்தி - மாநிலத்தில் அமைதியைக் கெடுக்கவும் - முன்னேற்றத்தைத் தடுக்கவும் முயற்சி செய்யும் அண்ணாமலை இது போன்ற மலிவான செயல்களை நிறுத்திக் கொள்வது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

-கலைஞர் செய்திகள் இணையம், 30.1.2023


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn