செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

செய்திச் சுருக்கம்

திட்டம்

சென்னை கலங்கரை விளக்கம் - பெசன்ட் நகரிடையே 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் - ஒன்றிய அரசு தொடக்கம்.

தாக்கல்

2023-2024 நிதியாண்டிற்கான நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத் தொடர் ஜனவரி 2ஆவது வாரத்தில் துவங்கி மே முதல் வாரம் வரை இரண்டாம் அமர்வும் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருந்துகள்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா காலத்தில் தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்.

மண்டலம்

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஒசூர் உள்ளிட்ட 8 இடங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளா தார மண்டலங்களை தமிழ்நாடு அரசின் மின்னணு நிறு வனம் அமைக்கிறது.

விநியோகம்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது.

பாதிக்கும்

பெற்றோரின் தேவையற்ற பிடிவாத சண்டையால் (ஈகோவால்) குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் போவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

செலுத்த

பொங்கல் பரிசு தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்.

அறிமுகம்

குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஆதாரில் குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் முகவரியை மாற்றிக் கொள்ளும் புதிய ஆன்லைன் https:/myaadhaar.vidai.gov.in/ என்ற சேவை அறிமுகம்.


No comments:

Post a Comment