செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

செய்திச் சுருக்கம்

நெறிமுறை

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற் கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

நியமனம்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எஸ்.ஆறுமுகம் அவர்களையும், கொடைக் கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக கலா அவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பெருமிதம்

இந்திய அளவில் தொழில் துவங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.

தமிழில்

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5 மருத்துவப் புத்தகங் களை வரும் 18ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

நெரிசல்...

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் வகையில் இணைப்பை ஏற்படுத்த, சென்னையில் உள்ள 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு.

பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேளாண்மைத் துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தகவல்.

அதிகரிப்பு

சென்னை விமான நிலைய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, சென்னை உள்நாட்டு விமான நிலையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் ஆகியவற்றில், பயணிகள் வருகைப் புறப்பாடு, ஒரே நாளில் 60,375 பேர் என அதிகரித்துள்ளது.

அறிவிப்பு

வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்த தகவலைப் பெறும் நடைமுறை கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்) அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உறுதி

உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்த 44 பேர் குறித்து இன்னும் 3 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.


No comments:

Post a Comment