ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 7.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பினை இன்று துவங்குகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* மொழி என்பது ஓர் இனத்தின் உயிர்; இலக்கியம் என்பது ஓர் இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம் தான் நம்முடைய தமிழ் இனம் - என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2024 இல் பாஜகவை எப்படி தோற்கடிப்பது என்ற தலைப்பில், எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலை அனைத்து மாநிலத் தேர்தல்களின் மொத்தமாக மாற்ற வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றில் மோடி அரசை குறிவைத்து தாக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, ஆளுநரின் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப் பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தரக் கோருதல் மற்றும் பொதுமக்கள் கருத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் வரைவுக்கும் அரசு ஆட்சேபனை உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ர மணியன் அளித்தார்.

தி டெலிகிராப்:

* நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவதே உங்கள் வேலை; அயோத்தியில் ராமர் கோவிலில் வழிபட மக்களை அழைக்க அர்ச்சகர் இல்லை என உள்துறை அமைச் சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பதிலடி.

* 2023 இல் கவனிக்க வேண்டிய புத்தகங்களில், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரெலட் எழுதிய ”குஜராத் கீழ் மோடி: இன்றைய இந்தியாவின் ஆய்வகம்” என்ற நூலை பைனான்சியல் டைம்ஸ் தேர்வு செய்துள்ளது..

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment