இயக்கம்
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு போக்கு வரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1.50 லட்சம் பயணிகள் முன் பதிவு செய்துள்ளார்.
மானியம்
வேளாண் துறை மூலம் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு புதய மின் மோட்டார் பம்பு செட் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்.
எச்சரிக்கை
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் குறைபாடு இருந்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகள் எச்சரிக்கை!
திரும்ப பெற...
அறநிலையத் துறையில், பதிவு பெற்ற குத்தகை தாரர்களிடமிருந்து, 5 ஏக்கருக்கு மேல் உள்ள நிலைங் களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவு.
பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை (12.1.2022) யுடன் முடிவுக்கு வருகிறது என வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு.
இழப்பீடு
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலிங்ன நேற்று தொடங்கி வைத்தார்.
அறிவுறுத்தல்
மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிக்கும் எளிய வழிகளை மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment