செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

செய்தியும், சிந்தனையும்....!

ஒரு கண்ணில் வெண்ணெய் - இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?

* தமிழ்நாடு அரசியலில் மொழி அரசியலைப் பார்க் கிறேன். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத் துவம் அளிக்கிறது.    - ஒன்றிய கல்வி அமைச்சர்

>> செத்துச் சுண்ணாம்பு ஆகிப் போன சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.1,488 கோடி; உலகின் பல நாடுகளிலும் பேசப்படும் தமிழுக்கு ஒதுக்கியதோ வெறும் ரூ.74 கோடி. இதுதான் ஒன்றிய அரசு தமிழுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமோ!

ஹிந்துக்களுக்கு இடம் கிடையாது...

* கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்து ஆன்மிகக் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.

- பா.ஜ.க. பிரமுகர்

>> கிறித்தவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஹிந்துக்களுக்கு இடம் கிடையாது என்று சொன்னால் என்னவாகும்?


No comments:

Post a Comment