ஹிந்து மதத்தின் எதிரிகள் யார்? கே.எஸ்.அழகிரி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

ஹிந்து மதத்தின் எதிரிகள் யார்? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை, ஜன.8 மற்ற மதங்கள்மீது வெறுப்பை காட்டுபவர்களே இந்து மதத்தின் எதிரிகள். மதநல் லிணக்கத்தை சீர்குலைக் கும் மக்கள் விரோதிகள்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதங்களுக்கு எதிரி இல்லை என்று கூறுபவர்கள் ஹிந்து பண்டிகை களுக்கு வாழ்த்து சொல்வார்களா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தொன்மைக் காலத்திலி ருந்து தமிழர்கள் விரும்பி கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதை வானதி சீனிவாசன் அறியவில்லையா? தமிழர் திருநாளாக கொண்டாடுவதை அவர் அறிவாரா? மற்ற மதங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்களே ஹிந்து மதத்தின் எதிரிகள். மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்கள் விரோதிகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.



No comments:

Post a Comment