வலுக்கட்டாயமாக இந்துக்களாக்கப்படுகின்றனர் மோடிமீது கத்தோலிக்க அமைப்புகள் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

வலுக்கட்டாயமாக இந்துக்களாக்கப்படுகின்றனர் மோடிமீது கத்தோலிக்க அமைப்புகள் குற்றச்சாட்டு

புதுதில்லி, ஜன.8- நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய அரசும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கத்தோலிக்க சங்கங்க ளின் கூட்டமைப்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளது. 

ஒன்றிய சிறுபான்மையினர் அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மாநில அமைச்சர் ஜான் பெர்லா ஆகியோரிடம் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் பலமுறை புகார் அளித்துள்ளன. அனைத்து குடிமக்களுக்கும் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பை உறுதி செய் வதே மய்ய வாக்குறுதியாக இருந்தது. இருப்பினும், சத்தீஸ் கரில் நடைபெறும் கிறிஸ்தவர்களின் துன்புறுத்தல் இந்த உறுதிமொழிகளுக்கு முரணானது. கர்ப் பிணிகள், குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்களை விட்டு வெளி யேற்றப்பட்டனர். வலுக்கட்டாயமாக ஹிந்துக்களாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கும் உடைமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என்று கிறிஸ்தவர் சங்கத்தின் டில்லி என்சிஆர் தலைவர் ஏ.சி.மைக்கேல் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருநாடகாவில் பைபிள் விநியோகம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகள் சமூக விரோத கும்பலால் தாக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது. பைபிள்கள் மற்றும்  சாக்லேட்களை விநியோகித்த குழுவினர்மீது தாக்குதல் நடத் தப்பட்டது. இதுகுறித்த  காட்சிப் பதிவு வெளியாகி யுள்ளது. கிறிஸ்துமஸ்  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பைபிள்கள் மற்றும் சாக்லேட்கள் வழங்கப்பட்டன. ‘யாரையும் கட்டாயப்படுத்த வில்லை’ என மிஷனரி குழுவைச் சேர்ந்த ரெபேக்கா கூறி னார். இந்த சம்பவம் குறித்து அகில பாரத கிறிஸ்டியன் மகாசபா கருநாடக மாநில காவல் துறைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளது.


No comments:

Post a Comment