இப்படி ஒரு கேள்வியை எழுப்பி கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளது இனமலரான 'தினமலர்'. (8.1.2023)
கண்டிப்பாகக் கல்வியையும், மருத்துவத்தையும் தந்தவன் வெள்ளைக்காரன்தான். வீட்டுக்கு வீடு ஜூரம் இருக்கிறதா? உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளதா என்று கேட்டு கன்னியாஸ்திரிகள் வருவார்கள்; தேவைப்பட்ட மாத்திரை மருந்து களையும் கூடக் கொடுப்பார்கள்.
ஹிந்து மதம்தான் 'அவாள் அவாள் தலை யெழுத்து, கர்ம பலன்' என்று கூறி, மனிதாபி மானமின்றிப் பேசியது.
அதேபோல, கல்விக் கூடங்களைத் திறந்து கண்களைத் திறப்பதற்கான தொடக்கத்தைக் கொடுத்தவனும் வெள்ளைக்காரன்தான். ஹிந்து மதவாதி என்ன சொன்னான்?
''சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே - சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; கேட்டால், காதில் ஈயத்தை ஊற்றவேண்டும்; படித்து வைத்திருந்தால், அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும்'' என்றான்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு, மறந்துவிட்டு திசை திருப்பாதே திரிநூல் 'தினமலரே!'
No comments:
Post a Comment