வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்துக எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்துக எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை,ஜன.1- புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் அசுத்தம் கலந்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நேற்று (31.12.2022) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன்  கலந்து கொண்டு பேசியதாவது:

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது இழிவான செயல். தமிழ்நாட்டிற்கு பெரும் தலைக்குனிவும், வெட்கக்கேடும் ஆகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி அருகே திண்ணி யத்தில் நடந்த வன்கொடுமையை போல இங்கும் நடந்துள்ளது வேத னைக்குரியது. சாதிய தீண்டாமை இன்னும் இருக்கிறது என்பதனை இது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

விசாரணை குழு

அந்த கிராமத்தில் கோவிலுக்கு சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடவும், அங்கு சாமியாடிய பெண் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பேசியதால் அவரையும், டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைப்பிடித்தவரையும் ஆட்சியர் கவிதாராமு, காவல்துறை சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் கைது செய்த நடவடிக்கை மேற்கொண்டது பாராட்டுக்குரியது. இதற்காக அமைக்கப்பட்ட விசா ரணை குழுவினர் நேர்மையாக செயல்பட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாதிய பாகுபாடுகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் புதுக் கோட்டை மாவட்டத்தை வன் கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல இடங் களில் ஜாதிய வன்கொடுமைகள் காணப்படுகிறது. இதற்கு காரணம் ஒன்றிய அரசின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது தான். அரசு நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டினாலும், அதிகாரிகள் அலட் சியம் காட்டுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கும் போது இக்கோரிக்கைகளை வலி யுறுத்துவேன். இந்த நிகழ்வில் பா.ஜ.க. மற்றும் சங்பரிவார அமைப் புகள் ஏன் குரல் கொடுக்கவில்லை. 

இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்ந்து அவர் செய்தி யாளகளுக்கு அளித்த பேட்டியில், "அரசு ஒப்பந்தம், குத்தகைகள் விடுவதில் தாழ்த்தப்பட்ட மக்களும் குத்தகை எடுக்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர சட்டசபையில் எங்கள் கட்சி சார்பில் தனி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். தமிழ்நாடு பெரியார் மண் என்றாலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்பது உண்மை தான். இதற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியம் தான். தி.மு.க.வுடன் கூட்டணியில் எங் களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. எங்களது கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு' என்றார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பாவா ணன், சசிகலைவேந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.


No comments:

Post a Comment