கயா மாநகராட்சி துணை மேயரான துப்புரவுத் தொழிலாளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

கயா மாநகராட்சி துணை மேயரான துப்புரவுத் தொழிலாளி

60 வயது பெண் துப்பரவுத் தொழிலாளி சிந்தா தேவி என்பவர் பீகார் மாநிலம் கயாவில் துணை மேயர் ஆகியிருக்கிறார்.

தொழிலாளி முதல் மேயர் வரை பகவதி தேவி மனிதக் கழிவுகளைச் சுமந்திருக்கிறார். தெருக்க ளைப் பெருக்கி சுத்தப்படுத்தியிருக்கிறார். அதோடு எலுமிச்சம் பழங்களை விற்றும் பிழைப்பு நடத் தினார். தற்போது அவர் பீகார் மாநிலம் கயா மாநக ராட்சியின் துணை மேயராக உயர்ந்திருக்கிறார். அவரது 3 மகன்களும் இதே மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றிக் கொண் டிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர் கயா மாநகராட்சி கவுன்சிலராக போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார்.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி அந்தப் பகுதி மக்களின் இதயங்களை சிந்தா தேவி கவர்ந்தார்.

துப்பரவுப் பணியாளர் பணியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அவர், மேனாள் துணை மேயர் மோகன் சிறீவத்சாவின் ஆதரவுடன் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

எழுதப் படிக்கத் தெரியாத சிந்தா தேவியை தேர்தலில் போட்டியிடுமாறு பலரும் வற்புறுத் தினார்கள். அவர் தயங்கினார். துப்புரவுப் பணியா ளர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டதால் தேர்த லில் போட்டியிட்டார். 11 பேர் போட்டியிட்ட நிலை யில், சிந்தா தேவி அமோக வெற்றி பெற்றார்.

இது குறித்து அவர் கூறும்போது, “இந்த நீண்ட பயணத்தைத் தொடருவேன் என்றோ, பலரது அன்பையும் மரியாதையையும் பெறுவேன் என்றோ நான் என்றைக்கும் நினைத்துப் பார்த்த தில்லை” என்றார். இந்த மாநகராட்சி தேர்தலில் சிறையிலிருந்தே வேட்புமனு தாக்கல் செய்து லக்சோ தேவி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். போதைப் பொருட்கள் கடத்தலுக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதேசமயம், எம்பிபிஎஸ் மாணவி சன்னு குமாரி, மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மனைவி சுக்தியோ பஸ்வானை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment