பெரியார் விடுக்கும் வினா! (879) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

பெரியார் விடுக்கும் வினா! (879)

உலக அதிசயங்களைப் புரிந்து கொண்டால்தான் நமது முட்டாள்தனங்கள் நமக்குத் தெரியும். இன்னும் உலகம் எந்த அளவுக்கு மாறும்? இன்னும் 4, 5 ஆண்டுகளில் மனிதன் தானாகவே பறப்பான். எப்படி என்பீர்கள்? பறக்கக்கூடிய இயந்திரத்தை முதுகில் கட்டிக் கொண்டு விசையைத் திருப்பினால் தானா கவே பறக்க ஆரம்பித்து விடுவான். இப்படிப்பட்ட புரட்சிகரமான மாறுதல் காலத்தில் 200 டன் விறகின் மேல் ஒரு முழுச் சிலையை வைதது 2,000, 3000 முட்டாள்கள் இழுக்கிறான் என்றால் நாமெல்லாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி என்ன?  

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment