ஒன்றிய பிஜேபி ஆட்சியின் சாதனை கடந்த16 மாதங்களில் வரலாறு காணாத வேலையின்மை - 8.30 விழுக்காடு உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

ஒன்றிய பிஜேபி ஆட்சியின் சாதனை கடந்த16 மாதங்களில் வரலாறு காணாத வேலையின்மை - 8.30 விழுக்காடு உயர்வு

புதுடில்லி,ஜன.3- தேர்தல் வாக்கு றுதிகளில் ஒன்றாக ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று பாஜக தெரிவித்தது. அதன் பின் னர் தேர்தல் வாக்குறு திகள் எல்லாம் வாக் காளப் பெருமக்களை ஏமாற்றவே சொன் னோம் என்று ஒன்றிய பாஜக அரசின் அமைச் சரே கூறினார்.

பிரதமர் மோடியோ, படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து கூறுகையில், படித்த இளை ஞர்கள் பக்கோடா விற்க லாம் என்று  கூறியதைத் தொடர்ந்து பெரும் எதிர்ப்பு நாடுதழுவிய அளவில் வெடித்துக் கிளம்பியது. பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதி லும், பொதுத்துறை நிறு வனங்களின் சொத்து களை, பங்குகளை விற்ப திலும் போட்டி போட் டுக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசு வேலைவாய்ப்புகுறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை. நாடு முழுவதும் ஒன்றிய பாஜக அரசால் வேலை வாய்ப்புகள் வழங்கப் படாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 16 மாதங் களில் வேலைவாய்ப்பின்மை விழுக்காடு 8.30 ஆக உயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங் களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்திய பொரு ளாதார கண் காணிப்பு மய்யம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தி யாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங் களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா வில் கடந்த நவம்பரில் வேலையின்மை 8 விழுக் காடாக இருந்தது. அது டிசம்பர் மாதம் 8.30 விழுக்காடாக உயர்ந் துள்ளது.

அதிகபட்சமாக அரியானாவில் வேலையின்மை 37.4 விழுக் காடாகவும், ராஜஸ்தா னில் 28.5 விழுக்காடாக வும் உயர்ந்துள்ளது.

நகர்ப்புற வேலையின்மை 8.96 விழுக்காட் டிலிருந்து 10.09 விழுக் காடாக உயர்ந்துள்ளது. அதே சமயம் கிராமப்புற வேலையின்மை 7.55 விழுக்காட்டிலிருந்து 7.44 விழுக்காடாக குறைந் துள்ளது. 

இந்தியாவில் வேலையின்மை மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வேலையின்மையும் விலைவாசியும் தீவிரடை மந்துள்ளதாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

இந்தியாவில் நிலவும் வேலையில்லாத் திண் டாட்டம் குறித்து கடந்த 31.12.2022 அன்று ராகுல் காந்தி செய்தியாளர்களி டம் கூறுகையில்,

 “இந்தி யாவின் ஜிடிபி வளர்ச் சியில் மட்டும் மொத்த கவ னத்தையும் மத்திய அரசு செலுத்து கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், இளை ஞர்களின் திறன் மேம்பாடு, ஏற்றுமதியைக் நோக்கமாகக் கொண்டு உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற் றிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment