126ஆவது நாள்: காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

126ஆவது நாள்: காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம்

சிறீநகர், ஜன. 23 காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங் குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள மழைக் காப்புடை அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  

126ஆ-வது நாளாக அவரது நடைப் பயணம் நடைபெற்று வருகிறது.

மதநல்லிணக்கத்தை வலியுறுத் தியும், 2024ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட் சிக்கு எழுச்சியூட்டவும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான 150 நாட்கள் நடைப் பயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி  குமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த நடைப் பயணமானது பல் வேறு மாநிலங்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த  வியாழக்கிழமை (19.01.2023) பஞ்சாப் வழியாக காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந் தார். அவருக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மேனாள் முதல மைச்சர் பரூக் அப்துல்லா வரவேற்பு அளித்தார்.  கதுவா மாவட்டத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் மாநிலம் மாதோபூரில் ராகுல் காந்திக்கு பாடல் மற்றும் நடனங்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வடமாநிலங் களில் கடும் குளிர் நிலவி வந்தாலும், இதுவரை வெறும்  டி-சர்ட் மட்டுமே அணிந்து நடைப் பயணம் சென்ற ராகுல் காந்தி, காஷ்மீரில்  நிலவும் கடும் குளிர், பனிப்பொழிவு காரண மாக, முதல் முறையாக  குளிரை போக்கும் குளிர் காப்புடை அணிந்து  நடைப் பயணம்  மேற் கொண்டார்.   ஜம்மு முழுவதும் தூறல் மழை பெய்ததால், ராகுல் காந்தி மழை மற்றும் குளிரில் இருந்து  தற்காத்துக் கொள்ள குளிர் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் ஆடையை அணிந்தார் என்று கூறப்படுகிறது.

மழை நின்றதும்,  தான் அணிந்து இருந்த  மழைக் காப்புடையைக் கழற்றிவிட்டு,  மீண்டும் வெள்ளை நிற டி-ஷர்ட்டில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. நடைப் பயணம் சத்வாலில் நிறுத்தப்பட்டு  ஹிரா நகரில் இருந்து துகர் ஹவேலி வரையிலும், விஜயபூரிலிருந்து சத்வாரி வரையிலும் செல்லும் என திட்டமிடப்பட்டு உள்ளது.

கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து மீண்டும் தொடங்கிய நடைப் பயணத்திற்கு ராகுல் காந்தி  மற்றும் அவருடன் நடைப் பயணத்தில் பயணிகளுக்கு காவல் துறை மற்றும் துணை ராணுவம்  வேலி அமைத்து, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாமர்களும் வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது சில இடங்களில் நடக்க வேண்டாம் என்று  ராகுலுக்கு பாதுகாப்பு முகமைகள்  முன்பு அறிவுறுத் தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, 52 வயதான காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹாலில் ஜனவரி 25 அன்று தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். 

மேலும் இரண்டு நாட் களுக்குப் பிறகு அதாவது ஜனவரி 27 அன்று அனந்த்நாக் வழியாக சிறீ நகருக்குள் நுழையத் திட்டமிடப் பட்டுள்ளது. ராகுலின் நடைப் பய ணம்  சிறீநகரில் ஜனவரி 30 அன்று நிறைவடைகிறது.  அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெறும் என்பதோடு இதில் கலந்து கொள்ள கூட்டணிக்  கட்சி தலைவர்கள், மாநில முதலமைச் சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment