ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலையாசிரியர்கள், நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலையாசிரியர்கள், நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம்

சென்னை, டிச. 9- கலை பண் பாட்டுத்துறை நுண் கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்கு விக்கும் வகையில் மாநில அளவிலான மரபுவழி - நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட் சிகளை நடத்தி, சிறந்த கலைப்படைப்புகள் வழங் கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியும், மாநில அளவில் கலைச்செம்மல் விருதும் வழங்கி  கலைஞர் களை  ஊக்குவித்து வருகி றது.

தமிழ்நாட்டில் ஓவிய, சிற்பக் கலைத்துறையில் சிறந்து விளக்கும்  ஆசிரி யர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாண்டு முதல் 10 கலையாசிரியர் களுக்கு தலா ரூ.10,000- வீதமும், ஓவியம், சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப் பித்த நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 கலை நூல் ஆசிரியர் களுக்கு ரூ.10,000 -வீதமும் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. தமிழ் நாடு முழுவதுமுள்ள ஓவி யக்கலை மற்றும் சிற்பக் கலை ஆசிரியர் களிடமி ருந்தும்,  ஓவிய, சிற்பக் கலைப்பிரிவில் நூல்களை பதிப்பித்த நூலாசிரியர் களிடமிருந்தும் விண் ணப்பங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன.

ஓவிய, சிற்பக்கலை ஆசிரியர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற் றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம்,  இதுவரை பெற்ற விருதுகள், சான்றி தழ்கள் உள்ளிட்ட விவ ரங்களுடன்) கூடிய விண் ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்பிரிவில் கலை நூல்கள் பதிப்பித்துள்ள நூலாசிரியர்கள் தங்க ளின் புகைப்படத்துடன் (றிணீssஜீஷீக்ஷீt ஷிவீக்ஷ்மீ றிலீஷீtஷீ) கூடிய தன்விவரக் குறிப் புடன் பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதி கள், அனுபவம்,  இதுவரை பெற்ற விருதுகள், சான்றி தழ்கள், பதிப்பித்த நூல் ஆகியவற்றினை இணைத்து  அனுப்பி வைக்க  வேண்டும்.

கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப் படும் தெரிவுக்குழுவின் மூலம்  சிறந்த கலையாசிரி யர்கள் மற்றும் சிறந்த கலை நூலாசிரியர்கள் தேர்வு  செய்யப்படுவர்.

மேற்காணும் விவரங் களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்பு டன்  கூடிய விண்ணப்பங் களை இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்  சாலை, எழும்பூர், சென்னை -600 002. தொலைபேசி எண். 28193195, 28192152 என்ற முகவரிக்கு 23.12-2022க் குள் அனுப்பி வைக்க வலி யுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment