தொழில்துறை பயிற்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

தொழில்துறை பயிற்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு


திருச்சி, டிச. 17-- தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளை சார்பாக நடத் தப்பட்ட “Pharma Knowledge and Training Institute - Finishing School"     என்ற பயிலரங்கம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. 

இதில் தமிழ் நாட்டிலுள்ள பல் வேறு மருந்தியல் கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இப்பயிலரங்கத்தில் மாண வர்கள் பல்வேறு மருந்தியல் தொழிற்சாலைகளை (Spinco Biotech (P) Ltd., Medo Pharm (P) Ltd., and Madras Pharmaceuticals)  பார்வையிட்டு, மேம் படுத்தப்பட்ட கருவிகளை கையாளுவதில் பயிற் சிப் பெற்றனர். 

மேலும்  RIPE  ஆலோசனை மய்யத்தின் மூலம் நடைபெற்ற மென் திறன் ( (Soft Skills) பயிற்சியிலும் பங்கு பெற்று தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொண்டனர். பயில ரங்கத்தின் நிறைவாக நடைபெற்ற தொழில்துறை பயிற்சிக்கான தேர்வில் மாணவி பி. வினோதினி முதல் பரிசாக வெள்ளி நாணயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், மென்திறன் பயிற்சிக்கான தேர்வில் மாணவர் எம். சக்திராம் முதல் பரிசாக பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

இப்பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மற்றும் பரிசு பெற்ற மாணவர்களுக்கு முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் இத்தகைய பெரும் வாய்ப்பை தங்க ளுக்கு வழங்கிய நிர்வாகத்தினர், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment