புதுச்சேரிக்கு மாநில தகுதி பெற அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

புதுச்சேரிக்கு மாநில தகுதி பெற அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி டிச. 17- புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட் டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க பல்வேறு வகை களில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு தொல்லை கொடுத்து வருகின்ற னர். குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மூலம் தொடர்ந்து முதலமைச்சர் ரங்க சாமியை சுந்தந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனை உறுதிபடுத்தும் வகை யில் அண்மை காலமாக முதல மைச்சர் ரங்கசாமியும் தொடர்ந்து ஒன்றிய அரசு மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றார். இந்நிலையில், புதுச்சேரிக்கு தனிமாநில அந் தஸ்தை வழங்க ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தி, 50-க்கும் மேற் பட்ட சமூக நல அமைப்புகள் ஒன் றிணைந்து சட்டப்பேரவை வளா கத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மேலும் புதுச்சேரிக்கு தனி மாநில அந் தஸ்து பெறுவதற்கு முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டு மென்றும், புதுச்சேரி உள்ள சமூக நல அமைப்புகளை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்த வேண்டும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்டு முதல மைச்சர் சமூக அமைப்பினரிடம் பேசுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் ஆள்வதில் சிரமம் உள்ளது என ஆளுபவர்களுக்கு மட்டுமே தெரியும் என தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது என 3 ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்து உள்ளதாகவும், மேலும் ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட் கிறார் என சிலர் கேலி செய்வதா கவும், ஆனால் புதுச்சேரி வளர்ச்சி யடைய வேண்டும் என்பதாலும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு ஊழியர்கள் தொடர்பாக வெளிப்படையாக நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கிய நிலையில், அதை செயல்படுத்தக்கூடாது என என அதிகாரிகள் உள்ளதாகவும், அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment