பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

பிற இதழிலிருந்து...

அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பற்றிய விவாதங்கள் 

ராஜீவ் தவான், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்

ஆளுநர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இன்றைய ஆளு நர்கள் புத்திசாலிகளாக இல்லை. ஆளுநர்கள் பலரும் அப்பட்டமாக அரசமைப்புச் சட்ட விதிகளை மீறியதன் மூலம் அவர்கள் வகிக்கும் உயர் பதவிக்கு  இழுக் கேற்படுத்தி உள்ளனர். ஆளுநர்களின் பணிகள் பற்றி ஏராளமான சர்ச்சைகள் நடந்துள்ளன. பிரிட்டிஷ் இந்தியா அரச மைப்புச் சட்டம் 1935 இன் படி ஆளுநர்களாக இருந்த வர்கள் பிரிட்டிஷ் அரசுக்காக செயல்பட்டார்கள். ஆரம்பத்தில், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட நிர்ணயசபை, ஆளுநர்கள் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என எண்ணியது. துணை ஆளுநர் வேண்டும் என்ற முன்மொழிவு  கைவிடப்பட்டது. பின்னர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் தேர்தல் மூலம் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதில்லை என்ற கருத்து மேலோங்கியது. வாக்காளர் மனநிலைக்கு எதிராக ஆளுநர்  செயல்பட லாம் என்பதால் தேர்தல் மூலமாக ஆளுநர் தேர்வு வேண்டாம் என்று முடிவானது.  

ஆளுநர் என்பவர் வெறும் அடையாளப்பூர்வமான தலைமையாகத்தான் இருப்பார் என்று சொன்னதுடன் கூடவே, அவருக்கு விருப்புரிமை அதிகாரம் வழங்கப் பட்டிருக்கும் என்று சொன்னதன் மூலம் டாக்டர். அம்பேத் கர் தனது கருத்துக்களுடனே  முரண்பட்டார். பிரஜேஸ்வர் பிரகாத் என்பவர் ஆளுநர்கள் குடி யரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்  என்ற திருத்தத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் முன்மொழிந்தார். அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்கள் பலரும் இந்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டனர். நேரு தற்போதைய சூழ்நிலையில் இந்த முன்மொழிவு விரும்பத்தக்கது, நடைமுறை எதார்த்த மானது, ஜனநாயகப் பூர்வமானது என்றார். டி.டி.கிருஷ்ணமாச்சாரி பிரதமரின் வெளிப்படை யான பேச்சுக்கு பின்னர் விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்ட தற்கிணங்க , இறுதியில் அம்பேத்கர்  ஆளுநர்களின் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தால் கட்டுப்படுத் தப்படும் என்று கூறி ஆளுநர்கள் தேர்வு தொடர்பான விவாதத்தை முடித்து வைத்தார்.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் இருந்த, அரசியல் கட்சி சாராத சுயேச்சை உறுப்பினர்கள் பல ரும் ஆளுநர்கள் அதிகாரங்கள் குறித்து எச்சரித்த னர். ஒன்றிய அரசின் ஏஜெண்டாக ஆளுநர்கள் செயல் படலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். அரச மைப்புச் சட்ட நிர்ணயசபை உறுப்பினர்கள் பலரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளு நர்கள் குறித்து மாறுபட்ட கருத்து கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துவதற்காகத் தான் இதையெல்லாம் குறிப் பிடுகிறேன்.

யார் நல்ல ஆளுநர்?

நேரு பேசும்போது ஆளுநர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை கோடிட்டுக் காட்டி னார். அவர் அந்த மாநிலத்தின் உள்ளூர் அரசியலில் சம்பந்தப்படாதவராகவும்,அந்த மாகாண அரசியலில் அறியப்படாதவராகவும், தீவிர அரசியலில் பங்கெடுக் காதவராகவும், கல்வியாளர் அல்லது பல்வேறு சமூகத் துறைகளில் புகழ்பெற்றவராக இருக்க வேண்டும் என்று நேரு குறிப்பிட்டார்.

விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள்

1960களில் ஆளுநர் பதவிகள் தவறாகப் பயன் படுத்தப்பட்ட பின்னர் பகவான் சகாய் விசாரணைக் குழு,  ஆளுநர்கள் அரசமைப்புச் சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாக (!?) தெரி வித்தார். மேலும், அவர் அபாயகரமான பரிந்துரை களை முன்மொழிந்தார். குடியரசுத் தலைவர் செயல கத்தில் ஒரு தனிப்பிரிவு அமைத்து, ஒவ்வொரு மாநி லத்திலும்,  குறிப்பிட்ட சூழலில் ஆளுநர்கள் எடுத்த முடிவுகளையும் அதற்கான காரணங்களையும் தொ குத்து அதை ரகசியமாக எல்லா ஆளுநர்களுக்கும் அனுப்ப வேண்டும். இது குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு வழி காட்டும் என்று பரிந்துரைத்தார். இது நாடு முழுவதும் ஒரு சீரான தன்மையை உருவாக்கும் என்றார். ஒன்றிய மாநில உறவுகள் பற்றி ஆய்வு செய்த சர்க் காரியா விசாரணைக் குழுவின் (1987) ஆளுநர்கள் மீதான விமர்சனம் எதார்த்தப் பூர்வமானதாக இருந்தது.

குறிப்பிட்ட சூழ்நிலையில்- 

1) பெரும்பான்மையை சோதித்து அறிவது 

2) முதலமைச்சரை தேர்வு செய்வது 3) சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைப்பது- அவற்றை குடியரசுத் தலைவரின் பரிசீல னைக்காக அனுப்புவது ஆகிய பிரச்சினைகளைக் குறித்த அதன் பகுப்பாய்வு ஒன்றிய அரசை கடுமை யாக குற்றம் சாட்டியது. 37 ஆண்டுகளில் 75 முறை மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப் பட்டது என்பதையும் அமர்த்து-  துரத்து எனும் கொள் கைப்படி எவ்வாறு ஆளுநர்கள் பந்தாடப்பட்டார்கள் என்பதையும் அந்தக் குழு பட்டியலிட்டது.

ஆளுநர் தேர்வுக்கான அளவுகோல்கள்

சர்க்காரியா குழுவின் பரிந்துரைகள் நேருவின் கருத்துக்களை ஒத்ததாக இருந்தது. அதற்கு மேலும் கூடுதலாக ஆளுநர்கள் எவ்வாறு அரசமைப்புச் சட்ட அறிவின்படி செயல்பட வேண்டும் என்பதை வலி யுறுத்தியது.

ஆளுநர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்-

1) சில துறைகளில் புகழ்பெற்றவராக 2) அவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக 3) அந்த மாநில  அரசியலில் மிகவும் நெருங்கிய தொடர்பு இல்லாதவ ராக - அரசியலில் சம்பந்தப்படாதவராக 4) சமீப காலத்தில் அரசியலில் பெரும் பங்கு வகிக்காதவராக இருக்க வேண்டும் என்று சர்க்காரியா விசாரணைக் குழு கூறியது.

மேலும்  ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சிக் காரராக இருக்கக் கூடாது - ஆளுநர்கள் நிய மனம் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் கலந்தா லோசிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. அரச மைப்புச் சட்டம் செயல்படும் முறை பற்றி ஆய்வு செய்த மனோபள்ளி நாராயண ராவ் வெங்கடா சலய்யா விசாரணைக் குழு சர்க்காரியா பரிந்துரைக ளையே பல வழிகளிலும் மேலும் வலியுறுத்தியது. பூஞ்சி விசாரணைக் குழுவும் நல்ல ஆளுநரின் தேவை பற்றி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகள் அனைத்தையுமே உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

ஆளுநரின் தனி விருப்புரிமை அதிகாரங்கள் பார பட்சத்துடன்  பயன்படுத்தப்பட்டதையும், ஆளுநர் பணி மென்மேலும் சர்ச்சைக்குரியதாக மாறி வருவதையும் குறிப்பிட்டது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்து ரைத்தல், மசோதாக்களை- நிலுவையில் வைத்தல் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பு தல் ஆகியவற்றில் ஆளு நர்களின் செயல்பாடுகள் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப் பிட்டது. ஆளுநர்களின் பதவிக் காலம் முடியும் முன்பாக நீக்குவதும் மாறுதலை செய்வதும் அந்த பதவியின் கவுரவத்தை குறைத்து விட்டது; ஒன்றிய அரசு தனது அரசியல் நலனுக்காக ஆளுநர் பதவியை பயன்படுத்துவதாக விமர்சித்தது. பல ஆளுநர்கள் ஒன்றிய ஆட்சியில் வேறு பதவியை நாடுபவர்களாக வும், ஆளுநர் பணிக்கு பின்னர் தீவிர அரசியலில் பங்கேற்பதாகவும், இதன் மூலம் அவர்கள் ஒன்றிய அரசின் ஏஜெண்டுகளாக கருதப்படுவதாகவும் குறிப் பிட்டது. ஆளுநர்களின் செயல்பாடுகள் ஒன்றிய, மாநிலங்களுக்கு இடையிலான சமநிலையை பாதிப்புக் குள்ளாக்கி விட்டதாக குற்றம் சாட்டியது.

மோடியின் ஆளுநர்கள்

மோடி பிரதமராக பதவி ஏற்றதுமே ஏறக்குறைய அனைத்து மாநில ஆளுநர்களையும் மற்றும் துணை நிலை ஆளுநர்களையும் மாற்றம் செய்தார். இந்த  மாறுதல் பட்டியலில் உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி சதாசிவமும் இருந்தார். அவர் என்ன கட்டாயத்தின் பேரில் மாற்றம் செய்யப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. இடதுசாரிகளின் கோட்டையான திரிபுராவில் தாதகதராய் சமூக வலைத்தளத்தில் ஹிந்துத்துவப் பிரச்சாரம் செய்தார். மோடிக்கு அவர் மிகவும் தேவைப்பட்டார். இவர்கள் அனைவரும் பாஜகவின் அரசியல் சதி வேலைக ளுக்கு தேவைப் பட்டனர். ஏழு யூனியன் பிரதேசங்களில் புதிதாக துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். டில்லி சட்ட மன்ற தேர்தலில் தோற்ற முதலமைச்சர் வேட் பாளர் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளு நராக்கப்பட்டார்.அனில் வைசால் தான் ஒரு பாஜக ஆதரவாளர் என்று ஒத்துக் கொண்டவர். நஜீப் ஜங் பாஜக அரசின் கட்டளைப்படி செயல்பட்டார். ஜம்மு -காஷ்மீர் ஆளுநர் எம்.என்.வோரா, ஒடிசா ஆளுநர்  எஸ்.சி. ஜெமின், நரசிம்மா (ஆந்திரா), கேசரி நாத் திரிபாதி (மே.வ.) மற்றும் கல்யாண் சிங் இவர்க ளெல்லாம் பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள் இல்லை என்று மறுக்க முடியுமா?

ஆளுநர் நியமன நடைமுறையில் மாற்றம் தேவை

ஆளுநர்கள் நியமனத்தில் புதிய  நடைமுறையை கண்டுபிடித்தாக வேண்டும். ஆளுநராக நியமிக்கப்பட உள்ளவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வரவழைத்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் முன்னிலையில் முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர்களது பொருத்தப்பாடும் , தகுதி யின்மையும்  அம்பலப்படுத்தப்பட வேண்டும். அரச மைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கருத்துக்களும், பல்வேறு விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளும் நாடாளு மன்ற விசாரணைக்கு போதுமானது. மோடியின் சில ஆளுநர் நியமனங்கள் அரச மைப்புச் சட்டத்தை அவமதிப்பதாக உள்ளது. மேகாலயா ஆளுநர் 

வி. சண்முகநாதன் பலரையும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக ஷில்லாங் நாளிதழ் விரிவாக எழுதியது. ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த 

80 அலுவலர்கள் அவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தது. ஆளுநர் மாளிகையை “இளம்பெண்கள் விடுதி யாக” மாற்றினார் என்று அலுவலர்கள் புகார் செய்தனர். இப்படிப்பட்ட நடத்தை உள்ளவர் ஏன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்? அவர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் என்பதால் தானே!

அருணாச்சலப் பிரதேச ஆளுநர் ஜோதி பிரகாஷ்  சட்டமன்றத்திற்கு ஒரு தலைப்பட்சமான தகவலை அளித்து ஜனவரி 23, 2016 இல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். பின்னர் பாஜக ஒன்றிய அரசின் அரசியல் நோக்கம் நிறைவேறியதும் குடியரசுத்  தலைவர் ஆட்சி வசதியாக திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் மற்றவர்களின் தீர்ப்பை வெட்டி எடுத்து காப்பி அடித்து (cut and paste judgement) தீர்ப்பு வழங்குவதில்  பேர்போன நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்தவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டார். அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் கலிக்கோ புல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். உத்தரகண்ட் ஆளுநர்  கே.கே. பால் உதவியால் முதலமைச்சர் ராவத் மீது சிபிஅய் விசாரணை ஏவப்பட்டு அவரது ஆட்சி கலைக்கப் பட்டது. இதை விசாரித்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு உத்தர கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி  திணிக்கப்பட்டது பாஜகவுக்கு சாதக மானது, அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது எனத் தீர்மானித்தது. கடும் உழைப்புடன் கூடிய கவன மிக்க தீர்ப்பை வழங்கக் கூடிய அறிவார்ந்த நீதிபதியான கே.எம். ஜோசப் இதற்காக பழிவாங்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கு தகுதியான அவரது பெயர் பரிந்துரை செய்யப்படாமல் கைவிடப்பட்டது.

தேர்தலின் நோக்கமே சிதைக்கப்படுகிறது

2017இல் கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்க ளில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றா லும் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஆளுநர்கள் உதவி செய்தனர். 2020இல் மத்தியப் பிரதேசம், 2022 இல் மகாராட்டிரம் என ஆளுநர்கள் உதவி, அதிகார பலத்துடன் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தேர் தல்கள் தான் இந்தியாவின்  பலமாகும். வாக்காளர் களின் மனநிலை, உணர்வு  தேர்தலில் வெளிப்படு கிறது. ஆனால் ஆளுநர்களின் செயல்பாட்டால் தேர்தலின் நோக்கமே அடிபட்டுப் போகிறது. சில ஆளுநர்கள் அரசமைப்புச் சட்டக் கொள்கைக ளை மீறி குற்றம் புரிகின்றனர். தொங்கு சட்டமன்றத்தில் முதலமைச்சரை நியமனம் செய்வது முக்கியமானப் பிரச்ச னையாகும். அவர்களுக்கு ஜனநாயக அடிப்படைகள், மக்களின் தீர்ப்பு பற்றி எல்லாம் அக்கறையில்லை.

மிகை உணர்ச்சி கொண்ட ஆளுநர்கள்

ஏறத்தாழ, அனைத்து ஆளுநர்களுமே பதற்றமும், மிகை உணர்ச்சி கொண்டவர்களாகவும், அரசியல் சார்புடன் செயல்படுபவர்களாகவும் இருக்கின்றனர். கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போன்றவர்கள் தங்களது சொந்த  அரசுகளுக்கே  சவால் விடும் வகையில் செயல்படுகின்றனர். சட்டமன்றம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சரை போல அல்லாது, ஆளுநர் பதவி என்பது நியமனம் செய்யப் படுவதாகும். எனவே ஆட்சியில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளை ஆளுநர்கள் மதித்து நடக்க வேண்டும். ஆளுநர் மாநில அரசிடம் மேற்கொள்ளும் தகவல் தொடர்பு பரிமாற்றம் விவேகமானதாக, கண்ணியமானதாக, மோதல் போக்கற்றதாக இருக்க வேண்டும். ஜெகதீப் தன்கர், தலைமைச் செயலாள ரையும், காவல்துறை தலைவரையும் ஆளுநர் மாளிகைக்கு கட்டளையிட்டு வரவழைத்தார்.

பல்கலைக்கழக வேந்தர் நியமனம் குறித்த சட்டத்தை திருத்தம் செய்ய கேரள மாநில அரசு விரும்பும் போது, ஆளுநர் ஆரிப் பல்வேறு பல்கலைக் கழக துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்கிறார். இந்த பிரச்சினை இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆளுநரின் எதிர்வினை மாநில அரசை அச்சுறுத்துவதாக உள்ளது. இடது ஜனநாயக முன்னணி அரசு, அரசு இயந்திரத்தை தகர்த்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.ஆளுநர் தனது சொந்த அரசுக்கு எதிராகவே போர் தொடுத்துள்ளார். “அவர்களாகவே  (இ.ஜ.மு.அரசு) இன்னும் பல பிரச்சினைகளை உரு வாக்கட்டும். அவர்களுக்கு தைரியம் இருந்தால் ரோட் டில் என்னோடு மோதட்டும். என்னை தாக்கட்டும் பார்ப் போம்” என்கிறார். முதலமைச்சர் பினராயி விஜயன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிமைப் பணிக ளில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார். அவரின்  செயல்பாடு ஆளுநர் பதவியின் கண்ணியத் திற்கு முற்றிலும் தகுதியற்றதாகும். 1959 இல் கேரளா  இடது முன்னணி அரசை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இப்போது ஆளுநர் ஆரிப் அதையே செய்யப் போவதாக அறிக்கை விடுகிறார்.

இது போன்ற செயல்பாடுகள் தாங்கள் பணிபுரியும் மாநில அரசுகளுக்கு குழிபறிப்பதாக உள்ளது. நாம் சில மாற்று வழிமுறைகளை தீவிரமாக பரிசீலித் தாக வேண்டும்.

ஆளுநராக நியமிக்கப்பட உள்ளவரை நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு வரவழைத்து அனைத்து  கட்சிகளைக் கொண்ட குழு ஒன்று அரசியல்வாதியாக இல்லாதவராக, ஆளுநர் விருப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்தப்படுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப் பட வேண்டும். ஆளுநர்களுக்கென அரசமைப்புச் சட்டத்தின் படியான நடத்தை நெறிமுறைகளை அர சமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதற்கான திருத்தம் செய்ய வேண்டும். இன்னும் பல தேவைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இன்றைய ஆளுநர்கள் புத்தி சாலிகளாக இல்லை. அவர்கள் அரசமைப்புச் சட் டத்தை சீர் குலைத்துள்ளனர். இவர்களின் செயல்பாடு களை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது.

நன்றி: ‘தீக்கதிர்' டிச. 23, 2022 


No comments:

Post a Comment