டிஜிட்டல் ஊடக ஒழுங்குமுறைக்கு தனிச் சட்டம் இயற்றும் திட்டம் இல்லை மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

டிஜிட்டல் ஊடக ஒழுங்குமுறைக்கு தனிச் சட்டம் இயற்றும் திட்டம் இல்லை மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி,டிச.18- டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அவர் அளித்த பதிலில், “2000-ஆவது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்து 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கொண்டுவந்தது. டிஜிட்டல் ஊடகங்கள் இந்த விதிமுறைகள் படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறை களை மீறும் ஊடகங்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment