உயர்ஜாதி பெண்ணுடன் பேசிய தாழ்த்தப்பட்டவகுப்பைச்சேர்ந்த இளைஞரை கொடூரமாக அடித்து துன்புறுத்திய இளைஞர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

உயர்ஜாதி பெண்ணுடன் பேசிய தாழ்த்தப்பட்டவகுப்பைச்சேர்ந்த இளைஞரை கொடூரமாக அடித்து துன்புறுத்திய இளைஞர்கள்

வடோதரா, டிச. 24, குஜராத்தில் உயர்ஜாதி பெண்ணுடன் அமர்ந்து பேசிய தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை சரமாரியாக அடித்து தாக்கிய வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் வடடோராவில்  உள்ளூர் தொலைக்காட்சியில் பிரபலமான பெண்ணுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த அல்பேஷ் பார்மர்(24) என்ற இளைஞர் பேசிகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர்கொண்ட கும்பல் பெல்ட் மற்றும் கம்பிகளால் அவரை அடித்து கடுமையாக தாக்கினர். இக்காட்சி இணையதளத்தில் பரவி வைரலானது.

உயர்ஜாதி சமூகப்பெண் உள்ளூர் தொலைக் காட்சியிலும் சமூகவலைதளத்திலும் பிரபலமான பெண். அவரது பதிவுகள் குறித்து அவ்வப்போது கருத்து பரிமாறி கொள்வார்கள்.  இதேபோல் தான் அவரது சமீபத்திய பதிவுகள் குறித்து தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் அப்பெண்ணுடன் உரையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அப்பெண்ணின் உறவினர்கள் அங்கு வந்து அவரது ஜாதியைக் குறிப்பிட்டு நீ எப்படி சரிசமமாக உட்கார்ந்து பேசலாம் என்று கூறி  அல்பேஷை அடித்து தாக்கியுள்ளனர். இதில் தலை, கை, கால்கள் மற்றும் முதுகில் பலத்த அடிபட்ட அல்பேஷை காவல்துறையிடம் சென்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த அல்பேஷின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அவர்களின்  புகாரின்பேரில் தாக்குதல் நடத்திய பெண்ணின் உறவினர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே, இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு உனாவில் தாழ்த்தப்பட்ட இளை ஞர்கள் கடுமையாக தாக்குதலுக்கு ஆளான போது “எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தாக்கா தீர்கள், என்னைத் தாக்குங்கள்” என்று மோடி கூறினாரே,, இந்த தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார்? குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான அரசில் உள்ள பல ஜாதிவெறி சிந்தனைகொண்ட அமைச்சர்களின் ஆதரவோடு தான் இது போன்ற கொடூர நிகழ்வுகள்நடக்கின்றன என்று அவர் குற்றம்சாட்டினார்.


No comments:

Post a Comment