திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கழக ஏடுகளுக்கு சந்தாதாரர்களை அதிகப்படுத்துவதென தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கழக ஏடுகளுக்கு சந்தாதாரர்களை அதிகப்படுத்துவதென தீர்மானம்

திருத்தணி, டிச. 31- திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தினுடைய கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை அன்று  திருத்தணியில் நடைபெற்றது.

 இந்நிகழ்விற்கு வருகை புரிந்தவர்களை மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் கோ கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கவிஞர் கி.எழில் தலைமையில் இந்நிகழ்வு நடை பெற்றது.

மேனாள் காஞ்சி மண்டல செயலாளர் க.ஏ.மோகனவேலு கடவுள் மறுப்பு வாசகத்தை எடுத்துக் கூறிட நிகழ்வு தொடங் கப்பட்டது.

கழக மாநில பிரச்சார பாட கர் முனைவர் ந.பன்னீர் செல்வம் பாடலுடன் நிகழ்வு துவங்கப் பட்டது.

இந்நிகழ்வில் மேனாள் மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் மா.மணி கருத்துரை வழங்கிட, பின்  மாவட்ட செயலாளர் ந. அறிவுச்செல்வன்,  பெரியார் பெருந்தொண்டர் கணேசன் மற்றும்  மாவட்ட துணை செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் பகுத்தறிவாளர் கழக வளர்ச்சி குறித்தும்,

இனி செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் மிக சுருக்கமாக எடுத்துரைத்தார். 

பகுத்தறிவு உலகை நோக்கி பயணிப்போம் என்ற தலைப்பில் கழக சொற்பொழிவாளர் பொதட் டூர் புவியரசன் கருத்துரை வழங் கினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ. வெங்க டேசன் பேசுகையில்  தந்தை பெரியார் ஏன் பகுத்தறிவாளர் கழகத்தை தோற்றுவித்தார்?

திராவிடர் கழகத்திற்கும் பகுத்தறிவாளர் கழகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? 

வருகின்ற காலங்களில் பகுத் தறிவாளர் கழக செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ப தான  உரையை வழங்கினார்கள்.

பின்பு நிறைவுரையாக சிறப் புரையாக பகுத்தறிவாளர்கள் கழக மாநில தலைவர் இரா.  தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கள் கழகம்  வருகின்ற ஆண்டு களில் செயல்படுத்த வேண்டிய யுத்திகள் குறித்தும்,  பகுத்தறி வாளர்கள் கழகத்தினுடைய உறுப்பினர்கள் சேர்க்கை அதிக வேண்டியதன் அவசியம் குறித் தும் தெளிவாக எடுத்துரைத்தார். 

உண்மை, விடுதலை, மாடர்ன் ரேசனலிஷ்ட், பெரியார் பிஞ்சு இதழ்கள் சந்தாதாரர் அதிகப் படுத்துவதுவென தீர்மானம் இயற்றப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்,

இந்நிகழ்வில் சம்பந்தம், சத் திரஞ்செயபுரம் மணி, முருகே சன், அம்மையார்குப்பம் வீர மணி, பெரியார் பிஞ்சுகள் பலர் கலந்து கொண்டனர், 

இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குறள் புத் தகம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment