தமிழர்களை வஞ்சிக்கும் இனவெறி இலங்கை அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

தமிழர்களை வஞ்சிக்கும் இனவெறி இலங்கை அரசு!

கொழும்பு, டிச. 31- கடுமையான பொருளாதார நெருக்கடிக் குள்ளான இலங்கை நாட்டுக்கு மனிதாபிமான முறையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களால் பெருமுயற்சி எடுத்து அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருள்களில் வழங் கப்பட்ட அரிசி மூட்டைகள் தமி ழர்கள் பெரும்பான்மையராக வாழும் மாகாணங்களில் வாழும் மக்களுக்கு வழங்கப்படாமல் பாழடிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழ் இணையம் 30.12.2022 அன்று வெளியிட்டுள்ள தகவல் வரு மாறு,

தமிழ்நாடு அரசு இலங்கைக்கு அனுப்பிய அரிசி மூட்டைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்து, அன்றாட உணவுகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து வந்த சூழ்நிலையில், இலங்கை வாழ் மக்களுக்கான தமிழ்நாடு அரசாங் கம் கடந்த மே மாதம் பாரிய உத வித் திட்டத்தை வழங்கியிருந்தது. 

தமிழ்நாட்டிலிருந்து கடந்த மே மாதம் 18ஆம் தேதி முதற் கட்ட உதவித் திட்டம், சென்னையிலிருந்து கொழும்பிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  தமிழ்நாட்டி னால் இலங்கைக்கு 40,000 மெட் ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் அத்தியா வசிய மருந்து வகைகள் வழங் கப்பட்டன. 

கொழும்பை வந்தடைந்த பொருட்களை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அப் போது பொறுப்பேற்று, அதனை இலங்கை அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். இவ்வாறு கையளிக்கப்பட்ட பொருட்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கு பகுதிக் கும் பெருமளவிலான பொருட் கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இவ்வாறு வடக்கு மாகாணத் தின் வவுனியா மாவட்டத்தி லுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக் கும் வகையில் அனுப்பி வைக்கப் பட்ட தமிழ்நாடு அரசின் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பெருந்தொகை அரிசி, பயன் பாட்டுக்கு உதவாத நிலையில், களஞ்சியசாலையொன்றிலி ருந்து கண்டெடுக்கப்பட்டுள் ளன. சுமார் 1272 கிலோ எடை யுடைய அரிசி தொகையே, இவ் வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட அரிசி, முழுமையாக பாவனைக்கு உத வாத வகையில் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வவுனியா - ஆசிகுளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மதுராநகர் கிராமத்திலுள்ள அரச கட்டடமொன்றிலிருந்தே, இந்த அரிசி மூடைகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி மூடை களே இவ்வாறு பதுக்கி வைக் கப்பட்டு, பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமை விசார ணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்திய அரசாங்கத்தின் இலட்சிணை பொறிக்கப்பட்ட, அரிசி மூடைகளே மீட்கப்பட்டு உள்ளன. 

இவ்வாறு கண்டெடுக்கப் பட்ட அரிசி மூடைகள் தொடர் பில், பிரதேச மக்கள் வவுனியா பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதிக்கு விரைந்த வவு னியா மாவட்ட செயலக கணக் காய்வு உத்தியோகத்தர்கள்;, உதவி பிரதேச செயலாளர் உள் ளடங்கிய குழுவினர், விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்த நிலையில், குறித்த அரிசியின் தரம் குறித்து ஆராய்வ தற்காக, பொது சுகாதார பரி சோதகர்களும் சம்பவ இடத் திற்கு பிரசன்னமாகியுள்ளனர். 

இதன்படி, குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளிலி ருந்து, 1272 கிலோகிராம் அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட அனைத்து அரிசி மூடைகளை யும், பரிசோதனைகளுக்காக மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்வதாக, அதிகாரி கள் பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், இந்த மூடைகளி லுள்ள அரிசியை, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்க ளுக்கு அறிவித்துள்ளனர். 

வவுனியா மாவட்ட உதவி பிரதேச செயலாளர், இதன் போது மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்துள்ளார். 

தமது உத்தியோகத்தர்களின் பக்கத்தில் பிழைகள் இருந் தாலும், இந்த விடயம் பொது அமைப்புக்களுக்கு தெரியாமல் இருக்கவில்லை என கூறி யுள்ளார். 

அரச உத்தியோகத்தர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, கிராமத்தை நடத்தவில்லை என கூறிய அவர், அதற்காகவே பொது அமைப்புக்களையும் தெரிவு செய்கின்றோம் என குறிப்பிட்டார். 

இந்த விடயத்தில் பொது அமைப்புக்களும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

கொழும்பிலிருந்து குறித்த அரிசி மூடைகள் வவுனியாவிற்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட போது, மழையுடனான வானிலை நிலவியதாகவும், அதனால் சில பொருட்கள் மழையில் நனைந் தமையினால் இந்த இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட தாகவும் அதிகாரிகள் கூறியுள்ள னர். 

எவ்வாறாயினும், தற்போது குறித்த அரிசி மூடைகள் பயன் படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும், பரிசோத னைகளின் பின்னர்தான் அரிசியை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் சரியான தகவல்களை கூற முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். 

இந்த நிலையில், குறித்த அரிசி மூடைகள், பிரதேச செய லகத்திற்கு கொண்டு செல்லப் பட்டு, சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment