2024 மக்களவைத் தேர்தல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்தலாம் : நிதிஷ்குமார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

2024 மக்களவைத் தேர்தல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்தலாம் : நிதிஷ்குமார்

பாட்னா,டிச.14  'வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால், பா.ஜ.க.வை நிச்சயம் தோற்கடிக்க முடியும்,'' என, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

பீகாரில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்த அய்க்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், சமீபத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரசு மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக தொடர்கிறார்.

இதைத் தொடர்ந்து, அவர் பா.ஜ.க.வுக்கு எதிராக தீவிர அரசி யலில் ஈடுபட்டு வருகிறார். வரும் 2024 மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, மாபெரும் கூட் டணி உருவாக்கும் முயற்சியில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். 

''கடந்த 2005, 2010இல் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில், அய்க் கிய ஜனதா தளம் மாபெரும் வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் அதிக தொகுதிகளை பெற முடி யாமல் போனதற்கு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததே காரணம்.  'எங்கள் வேட்பாளர்களின் தோல் விக்காக பா.ஜ.க. மறைமுகமாக வேலை பார்த்தது' என, அய்க்கிய ஜனதா தள தலைவர் லாலன் சிங் சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார் கூறியதாவது:

வரும், 2024 மக்களவை தேர் தலில், அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அனைவரும் ஒற்றுமை யுடன் இணைந்து செயல்பட்டால், பா.ஜ.க.வை நிச்சயம் தோற்கடிக்க முடியும். எங்கள் கூட்டணி மூன் றாவது அணியாக அல்லாமல், பிர தான எதிர்க்கட்சிகளின் கூட் டணியாக உருவாகும்.

இது தொடர்பாக, தி.மு.க., தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, திரிணமுல் காங்கிரசு மதச்சார்பற்ற ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் பேசியுள்ளேன். இந்தக் கட்சித் தலைவர்களை பாட்னாவுக்கு அழைத்து, ஜனவரி முதல் வாரத்தில் பேச்சு நடத்த உள்ளேன். 

பீகாரின் குர்ஹானி இடைத் தேர் தலில் நாங்கள் தோல்வி அடைந்தது குறித்து பா.ஜ.க. பேசி வருகிறது. ஆனால், அவர்கள் இரு தொகுதிகளில் அடைந்துள்ள தோல்வி குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகிலேஷ்

இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சருமான அகி லேஷ்  செய்தியாளர்களிடம்   கூறிய தாவது: விலைவாசி உயர்வு உச்சத்தை தொட்டு வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் பாபா சாகேப் அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. 

எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைய வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ்குமார், மம்தா, சந்திரசேகர ராவ் போன்ற தலை வர்கள் ஈடுபட்டுள்ளனர். நிச்சயம் கூட்டணி அமையும்.

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment