புதுவையைச் சேர்ந்த நடேசன் கைலாசம் என்பவர் நேரடியாக கழகத் தோழர் என்பதைவிட - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் "எங்கள் கழகத்தில் இருவகைப்பட்டவர்கள் உண்டு; ஒரு வகை கண்ணுக்குத் தெரிந்தவர்கள் - நேரடியாக கழகப் போராட்டங் களிலும் பங்கு கொண்டு சிறைக்குச் செல்லக் கூடியவர்கள். மற்றொரு வகையினர். நேரடியாக இயக்கத்தில் ஈடுபடாமல், அதே நேரத்தில் இயக்கக் கொள்கைகளை, தந்தை பெரியார் அவர்களின் லட்சியங் களை உள்ளத்தில் கொண்டு ஒழுகி வருபவர்கள்" என்பார். அத்தகைய வர்களில் ஒருவர் தான் பெரியவர் நடேசன் கைலாசம்.
அவர் ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார். 2023ஆம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் காலண்டரின் முகப்புப் படங்களாக கவுதம புத்தர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை மணி யம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, ஜி.டி. நாயுடு, நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பேராசிரியர் க.அன்பழகன், முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் படங்களை தனித்தனி காலண்டர் களாக வெளியிட்டுள்ளார்.
அடக்கமாக இத்தகைய அரும் பணியைச் செய்யும் தோழர் நடேசன் கைலாசம் போன்றவர்கள் பாராட் டுக்கு உரியவர்கள், வாழ்த்துகள்!
No comments:
Post a Comment