மோ(ச)டி அரசின் அநீதியோ அநீதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

மோ(ச)டி அரசின் அநீதியோ அநீதி!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது ஒன்றிய அரசு பேராசிரியர் பணி இடங்களை நிரப்பாமல் வைத்துள்ளது,

 நாடாளுமன்றத்தில் பல்கலைக்கழகங்களில் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும் போது, 

“மத்திய பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப் பட்ட பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 பதவிகளும்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 பதவிகளும்; 1357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 பதவிகளும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. 

அதுபோலவே பழங்குடி பிரிவினருக்கான 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 367 பேராசிரியர் பதவிகளில் 311 பதவிகளும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 பதவிகளும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 பதவிகளும் நிரப்பப்படவில்லை. 

அதே போல் அய்.அய்.டி.களில் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.  அய்.அய்.எம்.களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 97 பதவிகளில் 53 இடங் களும், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட 40 பதவி களில் 34 இடங்களும் நிரப்பப்படவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை.” என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித் துள்ளார்.

இதைப் படிக்கும்போது நெஞ்சமெல்லாம் பதறுகிறது. இந்த அநியாய, அக்கிரமத்தைக் கேட்பாரில்லையோ என்று இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.

பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட் டோரும் எப்படி எல்லாம் சட்ட விரோதமாக பழி வாங்கப்படுகின்றனர் என்பதைப் புள்ளி விவரங்கள் பகர்கின்றன (அட்டவணை - இதன் பக்கத்தில் காண்க).

"கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கிமனையில் வை" என்பதுபோல, ஏற்கெனவே ஆதிக்க நங்கூரம் பாய்ச்சியுள்ள உயர் ஜாதிப் பார்ப்பனர்களுக்கு பொருளா தாரத்தில் நலிந்தவர்கள் என்று கூறி 10 விழுக்காடு இடஒதுக்கீடு!

பெரும்பாலான மக்களான பார்ப்பனரல் லாதார் இந்த உண்மையை உணர்ந்தால் ஒரு நொடி பிஜேபி ஆட்சி நிலைக்க முடியுமா? தேவை ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப் புணர்வுப் பரப்பி,  கிளர்ந்தெழச் செய்வதே!

No comments:

Post a Comment