பக்தி வளர்க்கும் ஒழுக்கம் இதுதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

பக்தி வளர்க்கும் ஒழுக்கம் இதுதானா?

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணமிழந்த அர்ச்சகர் தற்கொலை

நாமக்கல், நவ.16 ஆன் லைன் ரம்மி விளையாட பலரிடம் கடன் வாங்கி விளையாடி பணத்தை இழந்த கோவில் அர்ச்சகர், கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்த காரணத்தால் தற் கொலை செய்துகொண்டார்.

நாமக்கலில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோயில் அர்ச்சகராக இருந் தவர் நாகராஜன் (வயது 50). இவரது வீடு அங்குள்ள நரசிங்க சுவாமி கோவில் பகுதியில் உள்ளது.

இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை கள் உள்ளனர். இந்த நிலை யில் காலையில் கழிவ றைக்குச் சென்ற அவர் வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவி னர்கள் கதவைத் தட்டினர்.அப்போதும் திறக்காததால் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அவர் சிறிய டவலில்  தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாகக் கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர், உற வினர்கள் கதறி அழுதனர்.

முதல் கட்ட விசாரணை யில், ஆன்லைன் ரம்மி விளையாட பலரிடம் கடன் வாங்கி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த அவர், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே நாக ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்தது.

இதே கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு பூஜை செய்துகொண்டிருந்த அர்ச்சகர் கால் வழுக்கி மேடையிலிருந்து டைல்ஸ் பதித்த தரையில் விழுந்து தலை சிதறி இறந்தது குறிப்பிடத்தக்கது,

ஆபத்பாந்தவன் ஆஞ்சநேயன் என்று கூறிக் கொண்டு இருந்தனர். இப் போது அவர்களையே  ஆபத்பாந்தவன் ஆஞ்ச நேயன் காப்பாற்றவில்லை.

No comments:

Post a Comment